இந்த கனவுகள் வந்தால் செல்வமும், மகிழ்ச்சியும் வருகிறது என்று அர்த்தம்!

0
14022

கனவுகள் நம் கடந்த காலத்தை காட்டும் கண்ணாடியாகவும், நம் எதிர்காலத்திற்கான சாவியாகவும் இருக்கிறது. கனவை விரும்பாதவர்களும், கனவு காணாதவர்களும் இருக்கவே வாய்ப்பில்லை.ஏனெனில் நிஜ உலகத்தில் நாம் செய்ய முடியாத பலவற்றை நாம் கனவுகளில் செய்யக்கூடும். ஆனால் என்ன கனவுகள் வர வேண்டும் என்பதை நம்மால் நிர்ணயிக்க இயலாது.

கனவுகள் நம்முடன் நாமே தொடர்பு வைத்து கொள்ள உதவும் ஒரு வழியாகும். நம்முடைய எதிர்காலத்தை பற்றி நமக்கு கனவுகள் சில அறிகுறிகளை தரக்கூடும். அதனை சரியாக புரிந்து கொள்வது நமது கைகளில்தான் உள்ளது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இந்த கனவுகள் நமது ஆழ்மனதில் இருந்து வெளிப்படும். இந்த பதிவில் கனவுகளை கொண்டு எதிர்காலத்தை அறிவது எப்படி என்று பார்க்கலாம்.

கனவுகள் வெற்றிபெறுவது, தோற்பது, விரும்பியவர்களை பார்ப்பது, பறவைகள், விலங்குகள், இடங்கள் என எதைப்பற்றி வேண்டுமென்றாலும் வரலாம். கனவுகள் எதை பற்றி வேண்டுமென்றாலும் இருக்கலாம் ஆனால் அவை அனைத்திலும் ஒரு செய்தி இருக்கும். உதாரணத்திற்கு கனவில் மிருகங்கள் வந்தால் அவை உங்களின் உணர்ச்சிகளையும், உள்ளுணர்வுகளையும், ஆசைகளையும் குறிப்பதாகும்.

கனவை பற்றி ஆராய்ச்சி மேற்கொண்ட நிபுணர்களின் கருத்துப்படி நாம் கனவில் நம்மை மனித உருவில் பார்க்க இயலாது. நாம் உடலை விட்டு வெளியே வந்தது போலவோ அல்லது மனித வடிவத்திலோதான் நம்மை கனவில் பாப்போம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இது நமக்கு நாமே நமது எதிர்காலத்தை பற்றி அனுப்பி கொள்ளும் செய்தி ஆகும்.

கனவில் வரும் விலங்குகள் என்ன என்பதை தெரிந்து கொண்டால் அது கூற வருவது என்னவென்பதையும், அதில் மறைந்துள்ள செய்தியையும் புரிந்து கொள்வது எளிதானதாக இருக்கும். உங்கள் கனவில் என்னென்ன மிருகங்கள் வந்தால் அவை உங்களிடம் கூறவருவது என்ன என்பதை மேற்கொண்டு பார்க்கலாம்.

உங்கள் கனவில் எறும்புகள் வந்தால் நீங்கள் கடினமாக உழைத்து உங்களுக்கு தேவையான பலன்களை அடையப்போகிறீர்கள் என்று அர்த்தமாகும். மேலும் விரைவில் உங்களை போலவே கடினமாக உழைக்க கூடியவருடன் கைகோர்த்து வெற்றிகரமான தலைவராக வரப்போகிறீர்கள். ஒருவேளை எறும்புகள் உங்கள் வீட்டிற்குள் நுழைவது போல கனவு கண்டால் உங்கள் குடும்பத்தின் அமைதி கெட போகிறது என்று அர்த்தம்.

உங்கள் கனவில் காளை வந்தால் உங்களுடைய உடல்வலிமை, வசீகரம் என அனைத்தும் அதிகரிக்க போகிறது என்று அர்த்தம். உங்களின் செல்வம் உடனடி உயர்வை பெரும். ஆண்களுக்கு இது புதிய உறவின் அடையாளமாக இருக்கலாம் ஆனால் பெண்களுக்கு அவர்கள் மனதளவில் காயமடைய போகிறார்கள் என்பதன் அர்த்தமாகும்.

கனவில் முதலை வருவது துன்பம் மற்றும் மோதலின் அடையாளமாகும். அவை உங்களை தாக்குவது போல கனவு கண்டால் உங்களுக்கு பெரிய பிரச்சினை காத்திருக்கிறது என்று அர்த்தம். ஒருவேளை நீங்கள் அதனிடம் இருந்து தப்பி ஓடுவது போல கனவு வந்தால் உங்களுக்கு வரப்போகிற பிரச்சினையில் இருந்து நூலையில் தப்பிக்க போகிறீர்கள் என்று அர்த்தம்.

உங்கள் கனவில் வௌவால் வருவது பயத்தின் அடையாளமாகும். அவை கனவில் வருவதை பொறுத்து அவற்றின் அர்த்தம் இருக்கும். நீங்கள் வௌவால்களால் தாக்கப்பட்டாலோ அல்லது கடிக்கப்பட்டாலோ நீங்கள் முடிவிலா பயத்தில் வாழ்கிறீர்கள் என்றார் அர்த்தம். அதுவே அவை குகைகளில் இருப்பது போல கனவு கண்டால் உங்கள் பயம் உங்களுக்கு தீங்கு விளைவிக்காது என்று பொருள்.

உங்கள் கனவில் புழுக்களையோ அல்லது 6 முதல் 8 கால்களுடைய பூச்சிகளையோ பார்த்தால் உங்கள் வாழ்கையில் அனைத்து மூலைகளில் இருந்தும் பிரச்சினைகள் நுழைய தயாராக இருக்கிறது என்று அர்த்தம். எனவே எச்சரிக்கையாகவும், நம்பிக்கையுடனும் இருங்கள்.

உங்கள் கனவில் தேனீக்கள் வந்தால் உங்களின் வாழ்க்கையில் இனிமை அதிகரிக்க போகிறது என்று அர்த்தம். நல்ல செய்திகளும், பொறுப்பில் செல்வமும் உங்கள் வீடு தேடி வரப்போவதின் அறிகுறிதான் இது.

Previous articleவாழ்க்கையில் செல்வத்தை ஈர்க்க இந்த ஒரு மந்திரமே போதுமானது! காதல் வெற்றி கடன் பிரச்சினை நீங்க!
Next articleஎச்சரிக்கை! இந்த அறிகுறிகளில் ஒன்று இருந்தாலும் உங்கள் உடலுக்குள் தீயசக்திகள் உள்ளது உறுதியாகிவிடும்!