கடந்த 2006ம் ஆண்டு பிரபல தொலைக்காட்சி நடிகை வைஷ்ணவி தற்கொலை செய்து கொண்டார். 22 வயதில் இறந்த இவரது மரணத்தில் தேவானந்த் என்பவர் சிக்கியிருந்தார்.
தேவானந்த் மிரட்டியதால் தான் வைஷ்ணவி தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்பட்டது. அவருக்கு மகளிர் நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தனர்.
ஆனால் தற்போது தேவானந்திற்கு கொடுக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.




