இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் சிலர் எதிர்பாராத சூழ்நிலையை எதிர்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட கால நேர அட்டவணையின்படி செயற்பட்ட மாணவர்களே இந்த நிலைக்கு முகம்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த11 ம் திகதி சிங்கள பாடத்தின் முதல் பகுதிக்காக பரீட்சை எழுத மாணவர்கள் பரீட்சை நிலையத்திற்குச் செல்லும்போது அந்த பரீட்சை முடிவடைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
காலை 8.30 மணியளவில் குறித்த பரீட்சை ஆரம்பமாகி உள்ளது. ஆனால் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் 12.30 மணியளவில் குறித்த பரீட்சை ஆரம்பம் என காணப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு பண்டாரவளை சீவலி மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி, ஹால்துமுல்லவில் தேசிய பாடசாலையைச் சேர்ந்த மாணவி மற்றும் அம்பாறையில் தனியார் பரீட்சார்த்தி ஆகியோரே அந்த நாளில் வினாத்தாளை எழுத முடியாதிருந்ததாக தெரிவித்தனர்.
எனினும், கால அட்டவணை குறிப்பிட்டுள்ள வலைத்தளத்தில் சரி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் புஜித கூறியுள்ளார்.
பரீட்சை அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்கே பரீட்சையில் தோற்ற வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.




