உடைந்துபோன சூரி! வெளியே சொல்லமுடியாத கஷ்டத்திலிருந்தபோது என்னை காப்பாற்றியவருக்கு இன்று இப்படி ஒரு முடிவா!

0
488

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடியனாக வலம்வருபவர் சூரி. இவர் இன்று தன் நெருங்கிய நண்பர் மரணத்தால் மனமுடைந்து பேசியுள்ளார்.

ஆம், இன்று பிரபல ஷங்கர் ஐஏஎஸ் அகேடமியின் நிறுவனர் ஷங்கர் தற்கொலை செய்து கொண்டார். இவர் இதுவரை நூற்றுக்கணக்கான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை உருவாக்கியுள்ளார்.

பலருக்கு முன்னோடியாக இருந்த இவர் குடும்ப பிரச்சனையில் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு பல பிரபலங்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் சூரி கூறுகையில், நான் சமீபத்தில் வெளியே சொல்லமுடியாத கஷ்டத்தில் இருந்தபோது அதை தெரிந்து எனக்கு அதை தீர்த்துவைத்தவர் ஷங்கர்.

ஆனால் அப்படிப்பட்டவர் இப்படி ஒரு முடிவை எடுத்ததை என்னால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை என்று உருக்கமாக பேசி தனது இரங்கலை தெரிவித்தார்.

Previous article900 முறை சிறுமிகளை கற்பழித்த காம கொடூரனுக்கு 22 ஆண்டு சிறை!
Next articleஅழகிகள் மூவர் கைது! ஆயுர்வேத மசாஜ் நிலையத்தை சுற்றி வளைத்த பொலிஸார்!