உச்ச நீதிமன்றத்தை சுற்றி இன்றைய தினம் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுகள் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவுள்ளது.
நேற்றைய தினம் மனு விசாரணையின் போது உச்ச நீதிமன்ற பகுதியில் சிலர் ஊ கூச்சலிட்டு பரபரப்பான சூழல் ஒன்றை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
இதனை தொடர்ந்து இன்றைய தினம் அந்த பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த மனுக்கள் தொடர்பில் அரசாங்க சார்பில் சட்டமா அதிபர் இன்றைய தினம் உச்ச நீதிமன்றத்தில் தனது கருத்தை முன்வைக்கவுள்ளார்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: