திருச்சி அருகே மணப்பாறை நடுகாட்டுப்பட்டி கிராமத்தில், வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுர்ஜித் 25ம் திகதியன்று மாலை அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்.
88 அடி ஆழத்தில் சிக்கியிருக்கும் சிறுவனை மீட்க 73 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு படை வீரர்கள் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்
சோளக் கொல்லையில
சொல்லாமப் போனவனே
மீளவழி இல்லாம
நீளவழி போனவனே
கருக்குழியிலிருந்து
கண்தொறந்து வந்ததுபோல்
எருக்குழியிலிருந்து
எந்திரிச்சு வந்திரப்பா
ஊர்ஒலகம் காத்திருக்கு
உறவாட வாமகனே
ஒரேஒரு மன்றாட்டு
உசுரோட வாமகனே
என சுர்ஜித் குறித்து பதிவிட்டுள்ளார்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: