சந்தோஷ் இயக்கத்தில் கடந்த வாரம் இருட்டு அறையில் முரட்டுக்குத்து படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பு பெற்றுள்ளது.
சுமார் ரூ 6 கோடி வரை இப்படம் வசூல் செய்து ஹிட் லிஸ்டில் இடம்பிடித்துள்ளது, இந்த நிலையில் இப்படத்திற்கு எதிர்ப்பும் வலுவாக உள்ளது.
சமீபத்தில் திருநங்கை அப்சரா கூட மிகவும் காட்டமாக ‘இதெல்லாம் என்ன மாதிரியான படம், ஒரு பாரம்பரியமான குடும்பத்திலிருந்து வந்த கௌதம் கார்த்திக் இப்படி நடிக்கலாமா?!
இந்த படத்தின் இயக்குனர் ஒரு பெண் காம ஆசையில் இறந்து அவள், அதற்காக பேயாக அலைவது போல் காட்டியுள்ளார், இதில் தெரிகின்றது இயக்குனர் புத்தி என்ன என்பது.
திருநங்கை, கே, ஹோமோசெக்ஸ் மாதிரியான உணர்வுகள் கொண்டவர்களுக்கு இன்னும் எங்களை மாதிரி சமூக அங்கீகாரம் கிடைக்கலை. சொல்லப்போனா, இப்பத்தான் கே, ஹோமோ செக்ஸ் உணர்வாளர்களை சமுதாயம் நிமிர்ந்து பார்க்கவே ஆரம்பிச்சிருக்கு, அதையும் இப்படத்தில் மிக கேவலமாக காட்டியுள்ளனர்’ என்று வெளுத்து வாங்கியுள்ளார் அப்சரா.