உங்கள் முன்ஜென்ம மரணம் எப்படி நடந்தது என்பதை இந்த அடையாளங்களை வைத்தே தெரிஞ்சிக்கலாம் !

0
1701

பிறக்கும் போதே உங்கள் உடலில் இருக்கும் அடையாளங்கள் உங்களின் மறுபிறவிக்கான அடையாளங்களாக கருதப்படுகிறது. உலகம் முழுவதும் பலரும் தங்கள் முன்ஜென்மம் பற்றிய நினைவுகளை பெற்ற வரலாறுகள் உள்ளது. மறுஜென்மம் என்பது இதிகாச காலம் முதலே இருந்து வருகிறது. பொதுவான அடையாளங்கள், குறைபாட்டுடன் பிறப்பது என அனைத்தும் உங்கள் முன்ஜென்மத்தின் சக்திவாய்ந்த உணர்ச்சிகளின் வெளிப்பாடாகும்.

பிறக்கும் போதே உங்கள் உடலில் இருக்கும் அடையாளங்கள் கடந்த ஜென்மத்தில் உங்கள் மரணம் ஏற்பட காரணமாக இருந்ததாகவோ அல்லது உங்கள் மீது அதிக பாதிப்பை ஏற்படுத்திய அதிர்ச்சிகரமான காரணத்தாலோ ஏற்பட்டதாக இருக்கலாம். அவை உங்கள் உணர்ச்சிகளுடன் நெருங்கிய தொடர்புடையவையாக இருக்கும். ஒருவழியில் இவை ஆன்மீகத்துடன் தொடர்பு கொண்டவைதான். இந்த பதிவில் உங்கள் உடலில் இருக்கும் பிறப்பு அடையாளங்கள் உங்கள் முன்ஜென்மத்தை பற்றி என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.

மறுஜென்மம் எடுக்கும்போது நமது ஆரா முன்ஜென்மத்தின் சில அறுகுறிகளை நமது உடலில் ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். நாம் அனைவரும் நமது பெற்றோரே நமக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் என்று விரும்புவோம். நம் குழந்தைகளும் நமது பெற்றோரை போல நடந்து கொள்ள நிறைய வாய்ப்பிருக்கிறது. அந்த சூழ்நிலைகளில் நமக்கு அவர்களே மறுபிறவி எடுத்துள்ளார்கள் என்று தோன்றும். இது போன்றதொரு சம்பவம் தாய்லாந்தில் நடந்துள்ளது. ஒரு பெண்ணிற்கு இறந்து போன அவர்களுடைய அம்மாவை போலவே உடலில் அடையாளங்கள் கொண்டு குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் செய்கைகளும், நடத்தையும் கூட அவரின் அம்மா போலவே இருந்ததாக அந்த பெண் கூறியுள்ளார்.

கரும் மற்றும் வெண்மை புள்ளிகள் நீங்கள் பிறக்கும் போது உங்கள் உடலில் கருமை அல்லது வெண்புள்ளிகள் இருந்தால் நீங்கள் உங்கள் கடந்த ஜென்மத்தில் நெருப்பால் இறந்திருக்க வாய்ப்புள்ளது. நெருப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதன் தாகம் சருமத்தில் நிரந்தரமாக இருக்கும். பிறக்கும் போதே கருமை மற்றும் வெண்புள்ளிகளுடன் பிறந்தால் உங்கள் கடந்த ஜென்மத்தில் நெருப்பால் நீங்கள் தாக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

சரும பிரச்சினைகள் உங்கள் உடலில் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் சருமம் சுருங்கியோ அல்லது கடினமாகவோ இருந்தால் நீங்கள் கடந்த ஜென்மத்தில் நோய்வாய்பட்டோ அல்லது கடுமையான காயத்தினாலோ இறந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த ஜென்மத்தில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதன் அறிகுறி இது.

மருக்கள் உங்கள் உடலில் மருக்கள் இருந்தால் கடந்த ஜென்மத்தில் நீங்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தீர்கள் என்று அர்த்தம். இது இந்த ஜென்மத்தின் பலனுடன் ஒத்திருந்தாலும் இது முன்ஜென்மத்தின் அதிர்ச்சியான அனுபவங்களின் வெளிப்பாடாகவும் இருக்கும்.

கட்டிகள் உங்கள் உடலில் கட்டிகள் இருந்தால் அது முன்ஜென்மத்தில் உங்களுக்கு ஆயுதங்களால் ஏற்பட்ட காயங்களின் அடையாளமாகும். உங்கள் உடலில் இருக்கும் கட்டிகள் உங்கள் முன்ஜென்மம் பயங்கரமானதாக இருந்ததற்கான அடையாளமாகும். இதனை குணப்படுத்த வேண்டியது அவசியமாகும் இல்லையெனில் இது இந்த ஜென்மத்திற்கு ஆபத்தாய் முடிந்துவிடும்.

கடுமையான நெருப்பு குறி அடர் சிவப்பு நிற அறிகுறி இருந்தால் நீங்கள் முன்ஜென்மத்தில் நெருப்பால் எரிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறீர்கள். இது சமீபத்தில் நடந்தாக இருக்கும், அதனால்தான் இந்த அறிகுறி கடுமையானதாக இருக்கும்.

புல்லட் காயம் போன்ற அறிகுறி அடர் ப்ரவுன் நிறத்தில் உங்கள் உடலில் அடையாளங்கள் இருந்தால் நீங்கள் கடந்த ஜென்மத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். இந்த அடையாளம் இருந்தால் நீங்கள் இந்த ஜென்மத்தில் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

குத்து காயத்திற்கான அறிகுறி உங்கள் உடலில் சற்று வளைந்த அடையாளம் ஏதாவது இருந்தால் நீங்கள் கடந்த ஜென்மத்தில் கத்தி அல்லது அதுபோன்ற கூர்மையான பொருளால் கொல்லப்பட்டிருக்கலாம். இதுவே இந்த அடையாளம் உங்கள் முகத்தில் இருந்தால் பாம்பு கடித்து இறந்திருக்க வாய்ப்புள்ளது.

கண் புள்ளிகள் கண்களை சுற்றி உள்ள இடங்களில் சிறிய சிறிய புள்ளிகள் இருந்தால் நீங்கள் நிச்சயம் முன்ஜென்மத்தில் கொலை செய்யப்பட்டிருப்பீர்கள். பெரும்பாலும் அது நீங்கள் தூங்கிய போது நடந்ததாக இருக்கும்.

உச்சந்தலை உங்கள் உச்சந்தலையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் முடி இல்லாமல் இருந்தாலோ எவ்வளவு முயற்சி செய்தும் அந்த இடத்தில் முடி வளராவிட்டாலோ உங்களின் கடந்த ஜென்மத்தில் கட்டாயப்படுத்தி உங்களின் தலைமுடி பிய்த்து எடுக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

அறுவை சிகிச்சை அடையாளங்கள் கடந்த காலங்களில் நோயை விட அதற்கான சிகிச்சைகள் மிகவும் மோசமானதாக இருந்தது. ஏனெனில் அந்த காலங்களில் அறுவைசிகிச்சையின் போது மயக்க மருந்து கொடுக்கும் பழக்கமும் இல்லை, சரியான வரைமுறையும் இல்லை. உங்கள் உடலில் இதற்கான அடையாளங்கள் இருந்தால் நீங்கள் அறுவைசிகிச்சையின் போது இறந்திருக்க வாய்ப்புள்ளது.

நெற்றி அடையாளம் உங்கள் நெற்றியில் ஏதேனும் அடையாளங்கள் இருந்தால் நீங்கள் கடந்த ஜென்மத்தில் அதிக குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஏனெனில் கடந்த காலங்களில் குற்றங்களில் ஈடுபடுவபவர்களுக்கு நெற்றியில் சூடுவைக்கும் பழக்கம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்கொலை அடையாளங்கள் உங்கள் தலையிலோ அல்லது கழுத்திலோ சிவப்பு நிற அடையாளங்கள் ஏதாவது இருந்தால் நீங்கள் கடந்த ஜென்மத்தில் தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கலாம்.

Previous articleபுலம்பெயர் நாட்டில் நடக்கும் நம்பிக்கை துரோகம்! இனியாவது திருந்துவார்களா நம் தமிழர்கள்!
Next articleதட்டுல சாப்பாட்டை வைத்து இப்படியா கொடுமைபடுத்துறது! வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் காட்சி!