பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இறுதி கட்டத்தினை நெருங்கிவிட்டது.
வழமையாக இறுதி போட்டியாளர்கள் 5 பேர் தெரிவு செய்யப்படுவார்கள். இன்றைய தினம் ஐந்தாவது போட்டியாளராக அஹானா தெரிவு செய்யப்பட்டார். அவருக்கு சிறந்த என்டடைனர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
இது மாத்திரம் இன்றி, நடுவர்கள் இறுதி நிமிடத்தில் ஆறாவது போட்டியாளர் இருப்பதாக கூறி அரங்கத்தினையே மகிழ்ச்சியின் உச்சத்தில் சிறகடிக்க வைத்து விட்டனர்.
ஆறாவது போட்டியாளராக சிங்கப்பூர் சூர்யா தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த வார போட்டியில் சூர்யா மற்றும் ஈழச் சிறுமி சின்மயிக்கு கடும் போட்டி நிலவி இறுதியில் ஒரு போட்டி நடுநிலைப்படுத்த பட்டிருந்தது. ஆறு போட்டியாளர்களின் திறமையை ஒப்பிடும் போதும் ஒருவருக்கு ஒருவர் சலித்தவர்கள் இல்லை.
எனவே இறுதி சுற்றில் கடும் போட்டிகள் நிலவும் என்று கூறப்படுகின்றது. பொருத்திருந்து பார்ப்போம் இறுதியில் யார் வெற்றி வாகைச் சூடுவார்கள் என்று.









