இவர் பெயரை எனது மகனுக்கு சூட்டியதில் பெருமை படுகிறேன்- சிபிராஜ்

0

இவர் பெயரை எனது மகனுக்கு சூட்டியதில் மிகவும் பெருமை படுகிறேன் என்று சிபிராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

நடிகர் சிபிராஜ் சமீபத்தில் வெளியான ‘வால்டர்’ வெற்றி பெற்றதை தொடர்ந்து கபடதாரி என்ற படத்தில் நடித்துள்ளார்.இப் படத்தை தயாரிப்பாளர் தனஞ்செயன், இயக்குநர் ஜான் மகேந்திரன் இணைந்து திரைக்கதை அமைக்க, சத்யா பட இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கி வருகிறார்.

இந்தவகையில் சிபிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை குறித்து எழுதியுள்ளார் இதில் “இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக போராடி வீர மரணம் அடைந்து தமிழர்க்கு பெருமை சேர்த்த மாபெரும் போராளி இவர் பெயரை என் மகனுக்கு சூட்டியதில் மிகவும் பெருமை படுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

By: Tamilpiththan

Previous articleஇயக்குனர் ராஜமவுலியின் பிரமாண்டமான புதிய படம்!
Next articleமீண்டும் நடிக்க தொடங்கிவிட்டார்-பூமிகா.