இவர் செய்த ஒரு காரியம் இவருடைய குடும்பத்தையே சின்னாபின்னம் ஆக்கிவிட்டது ….!
இலங்கை யாழ்ப்பாணத்தில் அலன் டில்சான் என்பவர் மனைவி குழந்தை என சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளார். இவர் செய்த ஒரு காரியம் இவருடைய குடும்பத்தையே சின்னாபின்னம் ஆக்கிவிட்டது என்பதை அவரே சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்….!
25.04.2020என் வாழ்க்கையை மாற்றிய நாள்..இவ்வளவு காலமும் சந்தோஷத்தை மட்டும் சுவாசித்த எனக்கு முதல்முறையாக கவலை என்பதை கற்பித்து தந்து விட்டாள் என் மனைவி..அப்பா இறந்த பின்பு அழுத நான் அன்று தான் அழுதேன்…
நான் மது அருந்து விட்டு செய்த செயலால் அவள் இந்த உலகை விட்டு சென்று விட்டாள்..கனவில் கூட நினைக்கவில்லை சந்தோஷமாக சென்ற வாழ்க்கையில் இவ்வளவு பெரிய சறுக்கல் வரும் என்று …என்னை பற்றி தெரியாத நிறைய பேரின் பழிச்சொல்லுக்கு ஆளாகிவிட்டேன்…
திருமணம் முடிக்க முதலோ பிறகோ என்னைப்போல் சந்தோஷமாக இருந்தது யாரும் இல்லை…அவள் இல்லாமல் என் வாழ்ககை எதிர் திசையில் பயணிக்கிறது..
குடித்து விட்டு செய்த செயலால் என் மனைவியின் இறுதிச்சடங்கில் கூட கலந்து கொள்ள முடியாத பாவியாகி விட்டேன்…அந்த நாட்கள் வெளியே என்ன நடக்கிறது என்று தெரியாமல் சிறையில் இருந்து மிகவும் வாடினேன்..அந்த வலி வார்த்தைகளால் சொல்ல முடியாது..அந்த வலி எதிரி,துரோகிக்கு கூட வரக்கூடாது…
நாங்கள் பிழைவிட்டு விட்டு விதியிலும்,கடவுளிலும்,பேயிலும் பழி போடக்கூடாது..நான் செய்த தவறினால் தான் என் மனைவியை இழந்தேன்..அவள் ஐந்து நிமிடம் யோசிக்காமல் எடுத்த முடிவால் என் ஆயுள் முழுவதும் அவள் நினைவுகளோடு வாழ வேண்டும்…அவளுக்கு நான் செய்த தவறுக்கு அவள் எனக்கு விட்டு சென்ற தண்டனை அதுதான்..
என்னில் தான் கோவம்.. என் ஆறு வயது பெண் குழந்தை என்ன தவறு செய்தது…கடவுள் எனக்கு காதலால் கொடுத்த மிகப்பெரிய சொத்தை இழந்துவிட்டேன்..கடவுள் கொடுத்த வரத்தை இழந்தேன்..
அழகான வாழ்க்கை, அளவில்லாத சந்தோஷம், அழகான முகம் மட்டும் அல்ல அழகான மனம் கொண்ட மனைவியை இழந்தேன்..
என் மனைவி என்னிடம் குடிக்க வேண்டாம் என்று ஒரு நாள் கூட சொன்னதில்லை..அளவாக குடிக்க சொல்லுவாள்.அன்று அவள் சொன்னதை நான் கேட்கவில்லை..அளவுக்கதிகமாக அதிகமாக குடித்ததால் அவளுடன் பிரச்சனை செய்தேன்..
என் மனைவி எனது குடிக்காகவே தனது உயிரை திறந்தவள்..அவள் எனது அம்மா எவர் சொல்லியும் நான் கேட்கவில்லை..கடைசியில் அதுக்காகவே அவள் இல்லாமல் போய்ராள்.இனி என் வாழ்க்கையில் அதை தொடமாட்டேன்..இதற்கு பிறகும் அதை தொட்டால் மனிதனே இல்லை…
என்னை திருத்தவே அவள் விளையாட்டாக செய்தது வினையாகி விட்டது..
அவளுடைய இழப்பு யார் என்ன ஆறுதல் வார்த்தை சொன்னாலும் ஈடுவராது..
நான் தான் தவறு செய்தேன்..என்னில் தான் கோபம்..என் குழந்தை என்ன தவறு செய்தது..அவள் கோவத்தினாலும் பிடிவாதத்தாலும் விளையாட்டாக கோழைத்தனமாக எடுத்த முடிவால் நிறையபேரின் கேளிக்கைக்கு ஆளானேன்..
வழமையாக எல்லோருடைய வீட்டில் வரும் சண்டை போல தான் அன்று என் வீட்டிலும் நடந்தது..அதிகமாக மது அருந்திய படியால் சண்டை பிடித்து விட்டு அவளை சமாளிக்காமல் நித்திரையாகிவிட்டேன்..எல்லாத்துக்கும் காரணம் இந்த குடிதான்..குடி குடியை கெடுக்கும் என்பார்கள் இப்போது எனக்கு குடியே இல்லாமல் போய்விட்டது..அளவுக்கு மீறியதால் என் குடியே என் வாழ்க்கைக்கு எமனாகி விட்டது..
நான் எவ்வளவு சந்தோசமாக வாழ்ந்தேன் என் மனைவியை எவ்வாறு பார்த்துக்கொண்டேன் என்று என்னை புரி்ந்தவர்களுக்கு தெரியும்..மற்றவனுக்கு பதில் சொல்லனும் என்று அவசியம் எனக்கு இல்லை..
உலை வாயை மூடலாம்..ஊர் வாயை மூட முடியாது..தவறு செய்தது நான்..அவள் கொடுத்த தண்டனையை ஏற்றுக்கொள்கிறேன்…
கழுத்தில் தூக்கு மாட்டி விட்டு என்னை கூப்பிட்டு இனி இப்படி செய்தால் தூங்கி செத்திருவேன் என்று ஒரு வார்த்தை சொல்லிருந்தால் அவள் செத்திருவாள் என்ற பயத்திலே அந்த சனியனை தூக்கி போட்டு விட்டு இன்னும் சந்தோஷமாக வாழ்ந்திருப்பேன்..அதற்கு கூட எனக்கு சந்தர்ப்பம் கடவுளும் கொடுக்கவில்லை..அவளும் கொடுக்கவில்லை..எல்லா கடவுளும் கை விட்டு விட்டது..சந்தோஷமாக வாழுற நான் இவள் இப்படி பண்ணுவாள் என்று யார் நினைப்பாங்க..
அவள் இல்லாமல் என்னால் இருக்க முடியாது தான்..அது அவளுக்கே தெரியும்..அவளே தனியாக தவிக்க விட்டு விட்டு போய் விட்டாள்..
தவறு செய்தது நான்.அவள் கொடுத்த தண்டனையை ஏற்றுக்கொள்கிறேன்.அவள் தான் பிள்ளையை நினைக்கவில்லை..இனி என் வாழ்க்கை என் பெண் பிள்ளைக்காகவும் என் அம்மாவுக்காகவும் வாழ்வேன் …
எவன் என்ன சொன்னாலும் என் வாழ்க்கையை எவனும் வாழ போறதில்லை தானே..திசைமாறி போன வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்று எனக்கு தெரியும்..
மீதி காலம் முழுவதும் என் மனைவியோட வாழ்ந்த சந்தோஷமான நாட்களை நினைத்துக்கொண்டு என் பிள்ளையை அவள் நினைத்தது போல் வாழ்ந்து என் மனைவியின் கனவுகளை நனவாக்குவேன்…நிறைய பேருக்கு நான் ஒரு சிறந்த உதாரணமாகவும் படிப்பினையாகவும் இருப்பேன்….
நான் இல்லாத வேளையிலும் எனது மனைவியின் இறுதிச்சடங்கில் எந்த ஒரு குறையும் இல்லாமல் நடத்திய நண்பர்கள் உறவுகள் அனைவருக்கும் ஆறுதல் கூறிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள்.
“குடி குடியை கெடுக்கும்”
By: Tamilpiththan