மும்பையில் இளம்பெண் ஒருவர் திருமணமாக ஆண் ஒருவரை ஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டார்.
மும்பை பர்பானி மாவட்டத்தை சேர்ந்தவர் சச்சின் மித்காரி(38). இவர் மருத்துவமனை ஒன்றில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் மித்காரியுடன் வேலை பார்க்கும் இளம்பெண் ஒருவர், அவருக்கு தொடர்ந்து செக்ஸ் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் என் ஆசைக்கு இணங்க மறுத்தால், என்னை கற்பழிக்க முயன்றாய் என உன் மீது வழக்கு போட்டுவிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.
இதனால் மனமுடைந்த மித்காரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மித்காரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பொலிஸார் மித்காரிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த அந்த பெண் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.