இளைஞருக்கு எமனான ஹப்பி பேர்த்டே! அதிரவைக்கும் காட்சி! சோகத்தில் நிலைகுலைந்த நண்பர்கள்!

0

ஒவ்வொரு வருடமும் பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது அனைவரது வாழ்விலும் முக்கியமான ஒன்றாகும். ஆனால் அந்த பிறந்த நாள் கொண்டாட்டம் மாணவன் ஒருவனின் உயிரை பறித்தது தான் பலரையும் அதிரவைத்துள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

இந்த சம்பவமானது ஐஐம் கல்வி நிறுவனத்தில் நடைபெற்றிருக்கிறது. பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடிய மாணவனிற்கு ‘Birthday Bumps’ கொடுக்கிறோம் என்ற பெயரில் பல மாணவர்கள் சேர்ந்து அந்த மாணவனை கண்மூடித்தனமாக தாக்குகிறார்கள்.

அதில் அந்த மாணவன் நிலைகுலைந்து போகிறான்.அதில் வயிற்று பகுதியில் பலமாக அடிபட்ட அவனை மருத்துவமனையில் சேர்த்தும்,சிகிச்சை பலனின்றி உயிரிழக்கிறான்.

இந்நிலையில் இது போன்ற கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். கொண்டாட்டங்கள் நிச்சயமாக அடுத்தவரின் சுதந்திரத்தையும்,உயிரையும் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

Previous article90களில் முன்னணியில் இருந்த சங்கவி இப்போது எப்படி இருக்கிறார்! லேட்டஸ்ட் புகைப்படம்!
Next articleஒல்லியாக இருந்த அருவி பட நடிகை தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா! வைரலாகும் புகைப்படம்!