இந்தியாவில் நடனப் பெண்ணாக சேர்ந்த ஒருவரை உடன் இருந்த நான்கு பெண்கள் ஆடைகளை அவிழ்த்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகேயுள்ள பேகம்பேட்டை பகுதியில் உள்ள பார் ஒன்றில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடனப் பெண்ணாக ஒரு பெண் சேர்ந்துள்ளார்.
பாரில் சேர்ந்த சில நாட்களிலேயே அங்கு வரும் வாடிக்கையாளர்களுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ளுமாறு, சக நடனப் பெண்கள் நான்குபேரும் மற்றொரு ஆண்டும் அந்தப் பெண்ணை வலியுறுத்தி வந்துள்ளனர். ஆனால், அதற்கு அந்தப் பெண் மறுத்துள்ளார்.
இதனால் அந்தப் பெண்ணுக்கு அவர்கள் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளனர். அந்தப் பெண்ணின் ஆடைகளைக் களைந்தும் அடித்தும் கொடுமை செய்துள்ளனர்.
பொறுமை இழந்த அப்பெண் உடனடியாக இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து இது குறித்து வழக்கு பதிவுசெய்த பொலிசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், நான்கு பெண்களும் பொலிசாரிடம் சிக்கிக்கொண்டனர். மற்றொருவரைத் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.
கைதுசெய்யப்பட்ட நான்கு பெண்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.