இளமையில் ஒழுக்க சீலர்களாக இருந்தாலும் 30 அல்லது 35 வயதிற்குப் பின்னர் அவர்கள் போதை அல்லது குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விடுவது எதனால் என்று ஜோதிடம் சொல்கிறது !

0

இளமையில் ஒழுக்க சீலர்களாக இருந்தாலும் 30 அல்லது 35 வயதிற்குப் பின்னர் அவர்கள் போதை அல்லது குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விடுவது எதனால் என்று ஜோதிடம் சொல்கிறது !

ஒரு சிலர் இளமையில் ஒழுக்க சீலர்களாக இருந்தாலும், 30 அல்லது 35 வயதிற்குப் பின்னர் அவர்கள் போதை அல்லது குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விடுகிறார்கள். இவர்களில் ஒரு சிலர் குறுகிய காலத்தில் நல்வழிக்கு திரும்பினாலும், பலரால் குடியை மறக்க முடிவதில்லை. இதுபோன்ற சந்தர்ப்ப சூழ்நிலையால் குடிக்கு அடிமையாவதை ஜாதகம் மூலம் கணிக்க முடியுமா?

பதில்: ஒருவருக்கு குறிப்பிட்ட கிரக அமைப்பு இருந்தால் அவருக்கு சிறு வயது முதலே தீய பழக்க வழக்கங்கள் இருக்கும். சனி+கேது அல்லது சனி+ராகு அல்லது சனி+சுக்கிரன்+ராகு அல்லது செவ்வாய்+சுக்கிரன்+ராகு ஆகிய கிரக சேர்க்கை காணப்பட்டால் அந்த ஜாதகருக்கு ஏதாவது ஒரு தீய பழக்கம் (போதை தொடர்பான) இருக்கும்.

சனி போதைக்கு உரிய கிரகம். எனவே, சனி+செவ்வாய் சேர்க்கை அல்லது சனி+செவ்வாய் பார்வை இருந்து, அதோடு சந்திரன் அல்லது சுக்கிரன் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்கள் குடிகாரர்களாக இருப்பார்கள். அறிவுரை கூறி திட்டினால் 4 நாட்களுக்கு குடிக்காமல் இருப்பார்கள். 5வது நாள் மீண்டும் குடிக்கத் துவங்கி விடுவார்கள்.

எது எப்படி இருந்தாலும் லக்னாதிபதி நன்றாக இருந்தால் அவர்களுக்கு போதைப் பழக்கம் ஏற்படாது. உதாரணமாக ஒருவர் சிம்ம லக்னத்தில் பிறக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள், அவரது லக்னாதிபதியான சூரியன், பாவ கிரங்களின் சேர்க்கை/பார்வை இல்லாமல், லக்னத்தை பாவ கிரகங்கள் பார்க்காமல் இருந்தால் அவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக மாட்டார்.

சனி/ராகு தசையில் ஏழரைச் சனி அல்லது ஆறாம், 8ஆம் அதிபதியின் தசையில் ஏழரை சனி/அஷ்டமத்து சனி வரும் போது போதை வஸ்துகள் மீது நாட்டம் வரும் அல்லது போதைப் பழக்கம் உள்ளவர்களின் நட்பு கிடைக்கும். முதலில் இலவசமாக அறிமுகமாக தீய பழக்கங்கள், விலை மதிக்க முடியாத நஷ்டத்தை ஏற்படுத்தி விடும். இவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலையால் போதைக்கு அடிமையாகி விடுவார்கள்.

சமீபத்தில் என்னிடம் தனது கணவரின் ஜாதகத்தை கொண்டு வந்திருந்தார் ஒரு பெண். கணவரின் நடவடிக்கைகள் கவலையளிப்பதாகவும், அடிக்கடி ‘விருந்து’ நிகழ்ச்சிகளுக்கு சென்று விட்டு தள்ளாடியபடி வீடு திரும்புகிறார் என்றும், சமயங்களில் சாலையிலேயே விழுந்து கிடப்பதாகவும் புகார் கூறினார். ஜாதகத்தைப் பார்த்ததில் அவருக்கு தற்போது போதை வஸ்துகளின் மீது நாட்டம் ஏற்பட்டுள்ளது புரிந்தது. ஆனால் அது மிகக் குறுகிய காலத்திற்கு மட்டுமே இருக்கும் என்பதையும் கணிக்க முடிந்தது.

ஜாதகத்தை முழுமையாக ஆய்வு செய்த பின்னர், அந்தப் பெண்ணிடம் பேசிய நான், “உங்கள் கணவருக்கு தற்போது மோசமான தசை நடந்து வருவதால், குடி, போதைப் பழக்கம் ஏற்படும். அவரிடம் இதற்காக நீங்கள் சண்டை போட்டால் குடும்பத்தில் தேவையில்லாத சண்டை சச்சரவுகள் ஏற்படும். அதுமட்டுமின்றி வெளிவட்டாரத்தில் அவரது மதிப்பு, மரியாதையைக் காப்பாற்ற நீங்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றேன்.அதற்கு அந்தப் பெண், “என்னால் என்ன செய்ய முடியுமோ அதனைச் செய்ய தயாராக இருக்கிறேன்” என்றார். இதையடுத்து அவருக்கான ஆலோசனைகளைக் கூறினேன்.

அதாவது வீட்டில் உள்ள ஆண்களிடம் (கணவரின் அண்ணன்/தம்பி/நெருங்கிய உறவினர்) கணவருக்கு தேவையான மது வகைகளை வாங்கி வந்து வீட்டிலேயே கணவரை தங்க வைக்க வேண்டும். இதனால் வெளியிடங்களுக்கு அவர் செல்வதை தடுக்க முடியும் என்றேன். முதலில் இதற்கு மறுப்பு தெரிவித்த அந்தப் பின், கணவரின் நலன் கருதி இந்த செயலை செய்வதாக ஒப்புக் கொண்டார்.

வாசகர்கள் கவனத்திற்கு… அந்தப் பெண்ணின் கணவர் தற்காலிக குடிகாரராக இருப்பதால் அவருக்கு வீட்டிலேயே மது அருந்தும் வசதியை செய்து கொடுக்க கூறியுள்ளேன். எல்லா பெண்களையும் நான் அதுபோல செய்யச் சொல்வதாக கருதக் கூடாது. சம்பந்தப்பட்ட ஆண் விரைவில் நல்வழி செல்வதற்கான வாய்ப்பு அவரது ஜாதகத்தில் இருப்பதால், அவரது நிலை கருதியே இதனை அவர் மனைவி செய்தார் என்பதையும் கூறிக் கொள்கிறேன்.

ஒரு வாரம் கழித்து என்னை மீண்டும் சந்திக்க வந்த அந்தப் பெண், “அவருக்கு (கணவருக்கு) வீட்டில் குடிப்பது போதவில்லை” என்ற குறை கூறுவதாக தெரிவித்தார். ஆனால், குறைந்தளவு மது கொடுப்பதுடன் நிறுத்திக் கொள்ளுங்கள். அவர் வற்புறுத்தினாலும் அதிகம் கொடுக்க வேண்டாம் என்று கண்டிப்பாக கூறி அனுப்பி வைத்தேன்.

மீண்டும் 4 மாதத்திற்குப் பின்னர் என்னை சந்திக்க வந்த அந்தப் பெண் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். ஒரு மாத காலம் குடியை விரும்பிய என் கணவர், அதன் பின்னர் அவற்றை வீட்டிலேயே, என் முன்னால் குடிப்பதற்காக வருந்தினார். அதன் பின்னர் மதுவின் மீதான அவரது ஆர்வம் குறையத் துவங்கியது. ஒரு வாரத்திற்கு முன் அவர் குடிப்பதை சுத்தமாக நிறுத்தி விட்டார்” என்று பெருமிதமாகக் கூறினார்.

இதில் வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால், தனது மனைவி தனக்காக படும் கஷ்டங்களை புரிந்து கொண்டு அந்தக் கணவர் குடிப்பழக்கத்தை கைவிட்டுள்ளார்.

இதுபோன்று ஒரு சிலர் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் (மோசமான தசை நடக்கும் போது) நிலை தடுமாறி போதையின் பக்கம் சென்றாலும், சிறிது காலத்திலேயே திருந்தி நல்வழிக்கு வந்து விடுவார்கள். ஆனால் ஒரு சிலருக்கு குறிப்பிட்ட கிரக அமைப்பு (ஜாதகத்தில்) இருப்பதால் அவர்களால் குடிப்பழக்கத்தில் இருந்து மீள முடிவதில்லை.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஜோதிடத்தின் அடிப்படையில் ஒருவர் சிரித்த முகம் அல்லது சிடுமூஞ்சியாக இருப்பது ஏன் ! இதற்கும் என்ன காரணம் !
Next articleமற்ற பறவைகளுக்கு இல்லாத முக்கியத்துவம் காகத்திற்கு கொடுக்கப்படுவது ஏன்? காகத்திற்கு அன்னமிடுவது பற்றி ஜோதிட நூல்கள் என்ன கூறுகின்றன !