இலங்கைஜயில் வந்த பிரித்தானியர் தம்பதியிடம் பல இலட்சம் ரூபா கொள்ளை!
பிரித்தானிய சுற்றுலா தம்பதி பயணித்த வாடகை வாகனத்தை வீதியில் நிறுத்திய சாரதி அவர்களிடம் பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார். எல்ல பிரதேசத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த பிரித்தானிய தம்பதிகளே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.
இந்த தம்பதியினர் எல்ல பிரதேசத்தில் உள்ள ஹோட்டலில் தங்கியுள்ளனர். அங்கிருந்து வாடகை வாகனம் ஒன்றில் கதிர்காமத்திற்கு சென்றுள்ளனர். இடை நடுவில் வைத்து வாகனத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக சாரதி கூறியுள்ளார். அவர்களை வாகனத்தை தள்ளுமாறு சாரதி கூறியுள்ளார். அதற்கமைய பிரித்தானிய தம்பதி கீழே இறங்கி வாகனத்தை தள்ளும் போது சாரதி வாகனத்தை நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளார்.
இதன் போது வாகனத்திற்கு இருந்த தம்பதியின் பொதியில் 10 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பணம் மற்றும் பொருட்கள் இருந்ததாக தெரியவந்துள்ளது. பிரித்தானிய தம்பதியினர் சம்பவம் தொடர்பில் வீரவில பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். எனினும் இதுவரையில் சாரதி கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.