இலங்கை யாழ்ப்பாணத்தில் இன்று நிகழ்ந்த அரிய சூரிய கிரணம்!

0

இலங்கை யாழ்ப்பாணத்தில் இன்று நிகழ்ந்த அரிய சூரிய கிரணம்!

சூரிய கிரகணம் இன்று உலகம் முழுவதும் காலை 8.06 மணியில் இருந்து தொடங்கி 11.09 மணிக்கு நிறைவடைந்தது. இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் பொதுமக்கள் ஆர்வத்துடன் கிரகணத்தை பார்வையிட்டனர். 10 வருடங்களுக்குப் பிறகு இலங்கையில் முழுமையான சூரிய கிரகணம் ஒன்றை பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் இன்று ஏற்பட்டது.

மேலும், இதனை வெறும் கண்களால் நேரடியாக பார்க்கக் கூடாது. அது கண்களின் விழித்திரையை பாதிக்கும். நிலவு சூரியனை கடந்து செல்லும் இறுதி நிமிடங்கள் மிகவும் கடுமையாக காட்சி அளித்தது. அப்போது சூரிய ஒளியை கட்டுப்படுத்தும் கண்ணாடியுடன் சிவப்பு நிறத்தை ஓரளவு காண முடிந்தது. அதுவும் மேக மூட்டம் இல்லாமல் வானம் தெளிவாக இருந்ததால் காணக்கூடிய நிலை ஏற்பட்டது.

தமிழகத்தில் சென்னை, ஊட்டி, கோவை, ஈரோடு, திருப்பூர், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் கேரள மாநிலம் பாலக்காடு உள்பட தென்னிந்தியா முழுவதும் ஓரளவு இந்த சூரிய கிரகணத்தை முழுமையாக காணமுடிந்தது. அதேபோல், இலங்கை, சிங்கப்பூர், சவுதி அரேபியா, கத்தார், மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் சூரிய கிரகணத்தை காண முடிந்தது.

Previous articleToday Rasi Palan இன்றைய ராசிப்பலன் – 26.12.2019 !இன்றைய பஞ்சாங்கம் ! Tamil calendar 2020 !
Next article3 நாட்கள் ஆறு கிரகங்கள் கூட்டணி தனுசு ராசியில்! எச்சரிக்கை திடீர் விபரீதம் நடக்கும்? யாருக்கு என்ன பரிகாரம்!