இலங்கை மக்களுக்கு அவரச எச்சரிக்கை!!!

0
413

இலங்கையில் வழமைக்கு மாறாக அதிக வெப்பமான காலநிலை நிலவுவதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் வான்பரப்பில் காற்றின் வேகம் குறைவடைந்தமை உட்பட காலநிலை மாற்றங்கள் காரணமாக வெப்பநிலை அதிகரித்துள்ளது.

இந்த வெப்பமான காலநிலை இந்த மாத இறுதி வரை தொடரும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதிக வெப்பமான காலநிலையால் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடும் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

அதிக வெப்பம் காரணமாக இலகுவாக சருமம் வறட்சி அடையக் கூடும் என தெற்கு கொழும்பு வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தில்ஹார் சமரவீர தெரிவித்துள்ளார்.

இவ்வாறான காலநிலையில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தப்பி கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

உடலை பாதுகாத்து கொள்ள நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 3 லீட்டர் நீர் அருந்துமாறு சுகாதார பிரிவு கேட்டு கொண்டுள்ளது.

கொழும்பு உட்பட பல பகுதியில் வழமையை விடவும் 4 செல்சியஸ் பாகை வெப்ப நிலை காணப்படுகின்மை குறிப்பிடத்தக்கது.

Previous articleமின்வெட்டு குறித்து இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிவிப்பு!
Next articleநண்பரின் வீட்டிற்கு நம்பி சென்ற இளம் பெண்: உறவினருக்கு நிர்வாண வீடியோவை அனுப்பிய பரிதாபம்!