இன்று துவங்கிய பிக்பாஸ் மூன்றாவது சீசனில் இலங்கையை சேர்ந்த டிவி செய்தி வாசிப்பாளர் லோஸ்லியா பங்கேற்றுள்ளார். அவர் செய்தி வாசிப்பது போலவே நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.
கமலுடன் அவர் பேசும்போது நீங்கள் தெனாலி படம் போல இலங்கை தமிழில் பேசிக்காட்ட முடியுமா என கேட்டார்.
அதற்கு கமல் சில நிமிடங்கள் இலங்கை தமிழில் பேசி காட்டினார். அதன்பிறகு அதில் பிழை இருந்தால் அதை கழித்துகொள்ளுங்கள் என காமெடியாக கூறினார்.