ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 73ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை நியூயோர்க் பயணமாக உள்ளார்.
பொது விவாதத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 25ஆம் திகதி உரையாற்றவுள்ளார்.
இதன்போது இலங்கை படையினர் மீதான போர்க் குற்றச்சாட்டுக்களை அகற்றுவதற்கான சிறப்பு கோரிக்கையை ஐ.நாவில் முன்வைக்க உள்ளதாகவும், போர்க்குற்றங்கள் தொடர்பான, இந்தப் பிரச்சினையை தீர்க்குமாறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் கோர உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை நிகழ்வுகளுக்கு செல்லும்போது அவருக்கு எதிர்ப்பை காட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடுகளை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.