நேபாள பிரஜையின் வயிற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ள ஹெரோயின்
காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நோபாள பிரஜையினால் விழுங்கப்பட்டிருந்த 90 ஹெரோயின் குளிசைகள் தற்போது அகற்றப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுவரை குளிசைகளாக விழுங்கப்பட்டு மீட்கப்பட்டுள்ள பாரியளவான ஹெரோயின் தொகை இதுவென கருதப்படுகிறது.
இவ்வாறு மீட்கப்பட்டுள்ள ஹெரோயினின் பெறுமதி 90 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரொன நேபாள பிரஜை, கடந்த மாதம் 30 ஆம் திகதி டுபாயில் இருந்து இலங்கை வந்த போதே கைது செய்யப்பட்டிருந்தார்.
அவர் தொடர்ந்தும் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் நீர்கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.