இலங்கை அரசின் திட்டம்: பாடசாலைகளில் ஜப்பான் மொழி!

0
138

இலங்கை அரசின் திட்டம்: பாடசாலைகளில் ஜப்பான் மொழி!

பாடசாலை மட்டத்தில் ஜப்பானிய மொழியை கற்பிக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதேவேளை ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைய ஜப்பானில் தொழிற்நுட்ப பயிலுநர்களாகவும் 14 துறைகளில் வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளவும் விண்ணப்பிக்கும் தகுதி இலங்கையர்களுக்கு இருக்கின்றது.

இதற்கு ஜப்பான் மொழியில் புலமை பெற்றிருப்பது அத்தியவசியமான தகுதி என்பதுடன் சில கட்டங்களாக நடத்தப்படும் பரீட்சைகளில் சித்தியடைய வேண்டும்.

இந்த சிறப்பு தகுதி வேலைத்திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஜப்பானில் வேலை வாய்ப்புகளுக்காக சுமார் 3 லட்சத்து 45 ஆயிரம் பேரை தெரிவு செய்ய அந்நாடு திட்டமிடப்பட்டுள்ளது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதற்காக ஜப்பான், இலங்கை உட்பட ஏழு நாடுகளுடன் உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டுள்ளது.

இதனை கவனத்தில் கொண்டு பாடசாலைகளில் தொழிற்நுட்பட பாடத்திட்டத்தின் கீழ் ஜப்பான் மற்றும் ஆங்கில மொழிகளை கற்பிக்க ஆரம்பிப்பது தொடர்பில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அமைச்சரவையில் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஜப்பானில் தொழில் வாய்ப்புகளை இலக்காக கொண்டு தாதி, பராமரிப்பு சேவைகள், கட்டட துப்பரவு, கமத்தொழில், மோட்டார் இயந்திரங்கள் அல்லது இலத்திரனியல் ஆகிய துறைகளில் மென்பொருள் திறன்களை மேற்படுத்துவது அரசாங்கத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சி தொடர்பாக வெளியான தகவல்!
Next articleவாட்ஸ் அப்பில் புதிய பிரைவசி அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது: மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவிப்பு!