எம்.ஜி.ஆரின் நினைவுதின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக தென்னிந்தியக் கலைஞர்கள் சிலர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
கண்டி பொல்கொல்ல கூட்டுறவு சங்க மண்டபத்தில் நாளை எம்.ஜி.ஆரின் இரண்டாம் நூற்றாண்டு ஆரம்ப விழா இடம்பெறவுள்ளது.
குறித்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இன்றைய தினம் அவர்கள் இலங்கை வந்தடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், நடிகரும் இயக்குநருமான கே.பாக்கியராஜ், நடிகர் பாண்டியராஜ், நகைச்சுவை நடிகர் ரமேஷ் கண்ணா, தேனிசைத் தென்றல் தேவா, குணச்சித்ர நடிகர் சரவணன் உள்ளிட்டோர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.




