கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம், சங்கிரில்லா நட்சத்திர ஹொட்டலின் மூன்றாவது மாடி, சின்னமன் கிரான்ட் மற்றும் கிங்ஸ்பெரி நட்சத்திர ஹொட்டல் ஆகிய 6 இடங்களில் இன்று குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.
160 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொழும்பில் இருக்கும் இந்திய தூதரகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து கண்காணித்து வருகிறோம், இலங்கையில் இருக்கும் இந்தியர்களுக்கு உதவி தேவைப்பட்டால் அல்லது ஏதேனும் தகவல் தெரிவிக்க வேண்டுமன்றால் எங்களை தொடர்புகொள்ளுங்கள் என தொலைபேசி எண்களை பதிவிட்டுள்ளனர்.




