Home Jaffna News இலங்கையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட வெளிநாட்டு பெண்கள்! 28 பேருக்கு கிடைத்த பேரதிர்ச்சி!

இலங்கையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட வெளிநாட்டு பெண்கள்! 28 பேருக்கு கிடைத்த பேரதிர்ச்சி!

0
510

இலங்கையில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட வெளிநாட்டு பெண்கள் 28 பேருக்கு ஒத்தி வைக்கப்பட்ட 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து விபச்சார தொழில் ஈடுபட்ட தாய்லாந்தை சேர்ந்த பெண்களுக்கு, கொழும்பு கோட்டை நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தாய்லாந்து நாட்டை சேர்ந்த குறித்த பெண்கள் குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டமையினால் அவர்களுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதனை அவர் 10 வருடங்களுக்கு ஒத்தி வைத்துள்ளார்.

அந்த 28 பேரில் 16 பேர் இலங்கையின் விசா விதிமுறையை மீறி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்துள்ளனர். குறித்த 16 பேருக்கு 150,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு சட்டத்தை மீறியமை தொடர்பில் பொலிஸாரினால் அவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த பெண்கள் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட விடுதியின் முகாமையாளரான இரு இலங்கை பெண்களுக்கு, 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன் 10 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

Previous articleசுக்ரன் பெயர்ச்சி… அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிக்காரர்கள் யார்? 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!
Next articleதென்சீனா கடலில் விமான ஓடுபாதைகள்,ஏவுகணை தளங்கள்!