நான்காவது கொரோனா நோயாளி மரணம்

இலங்கையில் கொரோனா வைரஸால் உயிரிழந்த நபர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளதாக பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில் நேற்று 58 வயதான நபர் உயிரிழந்திருந்தார்.
இவருக்கு வேறு நோய்கள் இருந்தமைக்கான சான்றுகள் எதுவும் இல்லை. ஆனால் இவர் தாமதமாக சிகிச்சை பெற்றமையினாலேயே உயிரிழந்ததாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கம் தெரிவித்துள்ளார். தாமதமாக சிகிச்சை பெற சென்றால் குறித்த நோயாளி ஆபத்தான நிலைமைக்கு முகம் கொடுக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுளள்ளார்.
கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தால் விரைவாக சுகாதார பிரிவை தொடர்பு கொள்ளுமாறு சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கம் தெரிவித்துள்ளார்.
By: Tamilpiththan