இலங்கையில் பெரும் மின்சார நெருக்கடி: எதிர்வரும் ஏப்ரல், மே மாத்தில் ஏற்படவுள்ள பாரிய மின்சார நெருக்கடி!
எதிர்வரும் ஏப்ரல் -மே மாதங்களில் இலங்கையில் பெரும் மின்சார நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும் என மின்வலு எரிசக்தி அமைச்சில் நடைபெற்ற பேச்சுவார்த்தை ஒன்றில் தெரியவந்துள்ளது.
இந்த நெருக்கடியானது மின்சாரம் துண்டிப்பு வரை செல்லக் கூடும் என கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் நடைபெற்றது.
அண்மைய காலத்தில் மின்சார தேவை அதிகரித்துள்ளதுடன் இதற்கு தேவையான மின்சார உற்பத்தி கட்டமைப்பு சேர்க்கப்படவில்லை என்பதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: