பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த நிலையில் தர்ஷன் நேற்று இலங்கை திரும்பினார்.
அவரின் வருகைக்காக காத்திருந்த ரசிகர் கூட்டத்தினை பார்த்து இன்ப அதிர்ச்சியில் உறைந்துள்ளார். சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் தர்ஷனுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.
மேலும், ஒரு சில சிறுவர்கள புகைப்படம் எடுக்க வந்த போது அவர்களது செல்போனை வாங்கி தர்ஷனே புகைப்படம் எடுத்து கொடுத்துள்ளார். அந்த வீடியோக்கள் தற்போது சமூக வளைத்ததில் வைரலாக பரவி வருகிறது.
இதேவேளை, முதல் இரண்டு சீசன்களையும் விட கமல் தொகுத்து வழங்கிய மூன்றாவது சீசன் மிகவும் சுவாரஸ்யமாகவே இருந்தது. அதில் தர்ஷன் வெற்றி பெற வில்லை என்றாலும் அவரை இலங்கையர்களும் ரசிகர்களும் ஹீரோவாகவே பார்க்கின்றனர்.
மேலும், மூன்றாவது இடத்தினை பெற்ற லொஸ்லியாவுக்கு கூட இப்படி ஒரு ரசிகர் கூட்டம் இலங்கையில் அவரை பார்க்க காத்திருக்க வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.