இலங்கைப் பெண்ணாக ஐஸ்வர்யா! இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில்!

0
468

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் அர்விந்த் சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண்விஜய், ஜோதிகா, அதித்தி ராவ் ஹைதரி, ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா எரப்பா மற்றும் பலர் நடித்திருக்கும் செக்க சிவந்த வானம் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.

ரோஜா திரைப்படத்தில் ஏஆர்.ரஹ்மானை மணிரத்னம் அறிமுகப்படுத்தியதன் பின்னர் இருவரும் இணைந்து பணியாற்றும் பதினாறாவது படம் இதுவாகும்.

இத்திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் இன்று ஆரம்பமான நிலையில் முதல் பாடலாக மழைக்குருவி என்ற பாடல் வெளியிடப்பட்டது.

இசை ரசிகர்களுக்கு விருந்துபடைக்கும் விதமாக அப்பாடலை பாடி ஏஆர்.ரஹ்மான் நிகழ்வை ஆரம்பித்துவைத்தார். இதனையடுத்து செவந்துபோச்சு நெஞ்சே என்ற பாடலை சுனிதா சாரதி பாடினார்.

தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இலங்கைப் பெண்ணாக நடித்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், கவிஞர் வைரமுத்து, அரவிந்த் சாமி, பாடகர் கார்த்திக், சுகாசினி மணிரத்னம், அருண் விஜய், ட்ரம்ஸ் சிவமணி, நடிகர் தியாகராஜன், மன்சூர் அலிகான் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Previous articleஉங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க! எந்த ராசிக்காரர்கள் காதலில் அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள்!
Next articleதிடீர் தற்கொலை செய்து கொண்ட பிரபல சின்னத்திரை நடிகை!‍‍‍ அதிர்ச்சியில் அவரது குடும்பம்!