இறந்துபோன பிரபல இசையமைப்பாளர்! வெளிநாட்டுக்கு சென்றுவிட்டதாக நம்பும் மனைவியின் பரிதாபம்!

0

திருவனந்தபுரம் அருகே நடந்த கோர விபத்தில் இசையமைப்பாளர் பாலா பாஸ்கர் மற்றும் அவரது இரண்டு வயது குழந்தை தேஜஸ்வனி ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

மகள் தேஜஸ்வினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாலா பாஸ்கரும் அவரது மனைவியும் பலத்த காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பாலா பாஸ்கர் ஒருவார சிகிச்சைக்கு பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ள மனைவி லட்சுமி, தனது கணவர் மற்றும் குழந்தையின் இறப்பை ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையில் உள்ளார்.

இதனை அவரது மனம் ஏற்றுக்கொள்ளவில்லை, தீவிர சிகிச்சையில் இருந்து லட்சுமி வீடு திரும்பியுள்ளதால், எதுவும் பேசாமல் மிகவும் அமைதியாக இருக்கிறார்.

இந்நிலையில், தனது கணவர் வெளிநாட்டில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றுள்ளதாக லட்சுமி நம்பியிருக்கிறார் என இறந்துபோன பாலாபாஸ்கரின் நண்பர் தேவ் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article7 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கட்டுநாயக்கா ஊடாக தப்பி ஓடிய ஹக்கீம்!
Next articleபோதும் என்னால் முடியாது மனமுடைந்த பெண் தற்கொலை!.