இரண்டரைக் கோடி மதிப்புள்ள நகைகளைக் கடத்திய சிங்கப்பூர் தம்பதிக்கு கட்டுநாயக்காவில் நேர்ந்த சோகம்!

0

இலங்கைக்கு ரூபா இரண்டரைக் கோடி மதிப்புள்ள நகைகளை கடத்த முயன்ற சிங்கப்பூர் தம்பதியினர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் முன்னணி அந்நிய செலாவணி நிறுவனத்தின் உரிமையாளர்கள் என சுங்க செய்தித் தொடர்பாளர் லால் வீரக்கோன்ன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.45 மற்றும் 55 வயதுடைய சந்தேக நபர்கள் இந்த ஆண்டு மட்டும் இலங்கைக்கு ஆறுமுறை பயணங்களை மேற்கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.கைது செய்யப்பட்ட நேரத்தில் அவர்கள் தங்கள் துணிகளுக்குள் 4.8 கிலோகிராம் எடையுள்ள நகைகளை மறைத்து வைத்திருந்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட நகைகளில் பெரும்பாலானவை நெக்லஸ் மற்றும் பதக்கங்கள்.குறித்த சந்தேகநபர்கள் நேற்றையதினம் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னர் இவர்கள் தொடர்பாக சுங்கப் பிரிவினருக்கு தகவல் கிடைத்ததாகவும் அந்த தகவலின் அடிப்படையிலேயே இந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅரச அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய மர்மக்குழு! மாத்தளையில் பரபரப்பு!
Next article38 வருடங்களின் பின் உயர்தரப்பரீட்சை எழுதப் போகும் அமைச்சர்! தென்னிலங்கையில் விசித்திரம்!