Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan இன்றைய ராசிப்பலன் – 26.08.2018 ஆவணி 10, ஞாயிற்றுக்கிழமை !

இன்றைய ராசிப்பலன் – 26.08.2018 ஆவணி 10, ஞாயிற்றுக்கிழமை !

0
1394

இன்றைய ராசிப்பலன் – 26.08.2018 ஆவணி 10, ஞாயிற்றுக்கிழமை !

இன்றைய பஞ்சாங்கம்

26-08-2018, ஆவணி 10, ஞாயிற்றுக்கிழமை, பௌர்ணமி திதி மாலை 05.26 வரை பின்பு தேய்பிறை பிரதமை. அவிட்டம் நட்சத்திரம் பகல் 12.36 வரை பின்பு சதயம். மரணயோகம் பகல் 12.36 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஆவணி அவிட்டம். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

மேஷம்

இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். புதிய முயற்சிகளில் தாமதங்கள் ஏற்படலாம். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் பெரியவர்கள் ஆறுதலாக இருப்பார்கள். வீட்டில் பெண்களின் பணிச்சுமை குறையும். மனநிம்மதி உண்டாகும்.

ரிஷபம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி கிட்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கைக்கு வந்து சேரும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

மிதுனம்

இன்று உடன் பிறந்தவர்கள் மூலமாக சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் மூலம் மகிழச்சி ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

கடகம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் தடை தாமதங்கள் உண்டாகும். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை.

சிம்மம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகளால் மனகஷ்டங்கள் உண்டாகலாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.

கன்னி

இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். உடல்நிலை சீராகும். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.

துலாம்

இன்று பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் செலவுகளை குறைத்து கொள்ள முடியும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் வாயிலாக சுபசெய்திகள் கிட்டும். சேமிப்பு உயரும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை அளிக்கும் என்றாலும் அவர்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. நவீன பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.

தனுசு

இன்று எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி உண்டாகும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் லாபகரமாக இருக்கும்.

மகரம்

இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றும். பெரிய மனிதர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். நண்பர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். கடன் பிரச்சனை சற்று குறையும்.

கும்பம்

இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.

மீனம்

இன்று உங்களுக்கு வரவும் செலவும் சமமாகவே இருக்கும். பணவரவில் சில தடங்கல்கள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. திருமண பேச்சுவார்த்தைகளில் சாதகமான பலன் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும். ஆரோக்கிய பாதிப்புகள் விலகும்.

Previous articleபெண்களின் மதுப்பழக்கத்தினால் உண்டாக்கும் பாதிப்புகள்!
Next articleயாழில் அடுத்தடுத்து கைதான 38 பேர் ! வெளியான அதிர்ச்சி தகவல்!