Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan இன்றைய ராசிப்பலன் – 03.12.2018 திங்கட்கிழமை !

இன்றைய ராசிப்பலன் – 03.12.2018 திங்கட்கிழமை !

0
1284

இன்றைய பஞ்சாங்கம்
03-12-2018, கார்த்திகை 17, திங்கட்கிழமை, ஏகாதசி திதி பகல் 01.00 வரை பின்பு தேய்பிறை துவாதசி. சித்திரை நட்சத்திரம் பின்இரவு 02.49 வரை பின்பு சுவாதி. பிரபலாரிஷ்ட யோகம் பின்இரவு 02.49 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

மேஷம்
இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். நீங்கள் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். சகோதர, சகோதரிகளின் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பணிபுரிபவர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும்.

ரிஷபம்
இன்று இல்லத்தில் தாராள தன வரவு உண்டாகும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகத்தில் நல்ல மாற்றம் ஏற்படும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

மிதுனம்
இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்த நிலையும் உண்டாகும். சுப முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும். தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சல் அதிகரித்தாலும் அதற்கேற்ற நல்ல பலன்களும் கிடைக்கும்.

கடகம்
இன்று உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன் உண்டாகும். சிலருக்கு புது பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும். வருமானம் பெருகும்.

சிம்மம்
இன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். வேலையில் எதிர்பாராத சிக்கல்கள் தோன்றும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பிரச்சினையை தவிர்க்கலாம். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

கன்னி
இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் அடைய முடியும். நீங்கள் நினைத்த காரியங்கள் எளிதில் நிறைவேறும்.

துலாம்
நீங்கள் இன்று கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவோடு செயல்படுவீர்கள். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உற்றார் உறவினர் வருகையினால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழில் சம்பந்தபட்ட வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும்.

விருச்சிகம்
இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் புரிவோர்க்கு அவர்கள் தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி கிட்டும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். சேமிப்பு உயரும்.

தனுசு
இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உங்களின் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கடன் பிரச்சினைகள் தீரும்.

மகரம்
இன்று உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் எளிதில் நிறைவேறும். உடல் உபாதைகள் குறைந்து ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்தியோக ரீதயான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

கும்பம்
இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வு, சுறுசுறுப்பின்மை ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 02.52 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எடுக்கும் காரியங்களில் இடையூறுகள் உண்டாகும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

மீனம்
இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு பகல் 02.52 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அமைதியாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை.

Previous articleவார ராசிப்பலன் – டிசம்பர் 2 முதல் 8 வரை !
Next article2019 rishapa rasi palan – 2019 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு பலன்கள் ரிஷப ராசி!