இன்றைய ராசிப்பலன் – 02.12.2018 ஞாயிற்றுக்கிழமை!

0

இன்றைய பஞ்சாங்கம்
02-12-2018, கார்த்திகை 16, ஞாயிற்றுக்கிழமை, தசமி திதி பகல் 02.00 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. அஸ்தம் நட்சத்திரம் பின்இரவு 03.00 வரை பின்பு சித்திரை. நாள்முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

மேஷம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமணம் சம்பந்தமான சுபகாரியங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொன் பொருள் சேரும்.

ரிஷபம்
இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.

மிதுனம்
இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் காலதாமதமாகும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு கூடும்.

கடகம்
இன்று குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். உற்றார் உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். தொழிலில் அதிக லாபம் கிட்டும். புதிய பொருள் வீடு வந்து சேரும்.

சிம்மம்
இன்று வீட்டில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படலாம். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும்.

கன்னி
இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும்.

துலாம்
இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும். வராத கடன்கள் வசூலாகும்.

விருச்சிகம்
இன்று சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். நண்பர்களோடு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்.

தனுசு
இன்று உங்களுக்கு இருந்த பொருளாதார நெருக்கடிகள் குறைந்து மனநிம்மதி உண்டாகும். பெரியோர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

மகரம்
இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறைந்து சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும்.

கும்பம்
இன்று உங்களுக்கு மனகுழப்பம் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சுபகாரிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்த்தால் பிரச்சினைகள் குறையும். பயணங்களில் கவனம் தேவை.

மீனம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleடிசம்பர் மாத ராசிப்பலன் 2018 – December Month Rasi Palan 2018
Next articleவார ராசிப்பலன் – டிசம்பர் 2 முதல் 8 வரை !