இன்றைய ராசிபலன் 18.4.2018!

0

இன்றைய ராசிபலன் 18.4.2018

18.4.2018 புதன்கிழமை விளம்பி வருடம் சித்திரை மாதம் 5-ம் நாள்.
வளர்பிறை திருதியை திதி மறுநாள் பின்னிரவு 3.35 வரை பிறகு சதுர்த்தி. கிருத்திகை நட்சத்திரம் மறுநாள் பின்னிரவு 2.18 வரை அதன் பிறகு ரோகிணி. யோகம்: அமிர்தயோகம் மறுநாள் பின்னிரவு 2.18 வரை அதன் பிறகு சித்தயோகம்.
குளிகை: 10:30 – 12:00
சூலம்: வடக்கு.
பொது: அட்சய திருதியை, ஸ்ரீ பலராமஜயந்தி, ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள் ஜனன உற்சவம், வேளூர் கிருத்திகை, கும்பகோணம் பெரியதெருவில் 12கருடசேவை, மன்னார்குடி கருடன்.
பரிகாரம்: பால்.

நல்ல நேரம் 6-7.30,9-10,1.30-3,4-5,7-10.
எமகண்டம் காலை மணி 7.30-9.00.
இராகு காலம் மதியம் மணி 12.00-1.30.

மேஷம் : நிம்மதி
ரிஷபம் : விரக்தி
மிதுனம் : பகை
கடகம் : திருப்பம்
சிம்மம் : திறமை
கன்னி : மகிழ்ச்சி
துலாம் : விவகாரம்
விருச்சிகம் : யோகம்
தனுசு : மகிழ்ச்சி
மகரம் : வெற்றி
கும்பம் : காரியம்
மீனம் : சிந்தனை

மேஷம்: காலை 9 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனஉளைச்சல் வந்து நீங்கும். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

ரிஷபம்: காலை 9 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.

மிதுனம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

கடகம்: அனுபவ பூர்வமாகவும், அறிவு பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் மனம் விட்டுப் பேசுவார்கள். மதிப்புக் கூடும் நாள்.

சிம்மம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். சாதிக்கும் நாள்.

கன்னி: காலை 9 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் டென்ஷன் வந்துப் போகும். பிற்பகல் முதல் சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

துலாம்: காலை 9 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச் சோர்வு வந்து நீங்கும். பழைய கடன் பிரச்னை அவ்வப் போது மனசை வாட்டும். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் ஏற்படும். சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். சிக்கனம் தேவைப்படும் நாள்.

விருச்சிகம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் உதவிகள் உண்டு. கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். நன்மை கிட்டும் நாள்.

தனுசு: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.

மகரம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. புதுமை படைக்கும் நாள்.

கும்பம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

மீனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தைரியம் கூடும் நாள்.

Previous articleபதறவைக்கும் சம்பவம்! 86 இடங்களில் தாக்கப்பட்டு சிறுமி படுகொலை.!
Next article‘போன்ல வேணாம்-நேர்ல பேசலாம்’ பதறிய நிர்மலாதேவி!