இன்றைய ராசிபலன் 1.7.2018 ஞாயிற்றுக்கிழமை !

0
766

இன்றைய ராசிபலன் 1.7.2018 ஞாயிற்றுக்கிழமை !

1.7.2018 ஞாயிற்றுக்கிழமை விளம்பி வருடம் ஆனி மாதம் 17-ம் நாள்.
தேய்பிறை திருதியை திதி மாலை 4.51 வரை பிறகு சதுர்த்தி. திருவோண நட்சத்திரம் இரவு 8.57 வரை பிறகு அவிட்டம். யோகம்: அமிர்தயோகம் இரவு 8.57 வரை பிறகு மரணயோகம்.
குளிகை: 3:00 – 4:30
சூலம்: மேற்கு.
பொது: சென்னை சுகப்பிரம்ம ஆசிரமத்தில் சுகப்பிரம்ம மகரிஷி ஜெயந்தி விழா, கோயம்பேடு சக்கரஸ்நானம், திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் ரத உற்சவம்.
பரிகாரம்: வெல்லம்.

ஞாயிறு
நல்ல நேரம் 7-10, 11-12, 2-4, 6-7, 9-11.
எமகண்டம் மதியம் மணி 12.00-1.30.
இராகு காலம் மாலை மணி 4.30-6.00.

மேஷம் : திட்டம்
ரிஷபம் : தனலாபம்
மிதுனம் : தாமதம்
கடகம் : உழைப்பு
சிம்மம் : மதிப்பு
கன்னி : பொறுப்பு
துலாம் : சாதிப்பீர்
விருச்சிகம் : அறிவு
தனுசு : சேர்க்கை
மகரம் : ஆதாயம்
கும்பம் : கவலை
மீனம் : அந்தஸ்து

மேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உடன்பிறந்தவர்கள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புகழ், கௌரவம் கூடும் நாள்.

ரிஷபம்: குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

மிதுனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சி வசப் படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். உத்யோகத்தில் உங்கள் திறமையை அதிகாரிகள் குறைத்து மதிப்பிடுவார்கள். எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.

கடகம்: மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். மகிழ்ச்சி கிட்டும் நாள்.

சிம்மம்: குடும்பத்தில் உள் ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

கன்னி: புதிய திட்டங்கள் நிறைவேறும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்- பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

துலாம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

விருச்சிகம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். சொத்து சிக்கலில் ஒன்று தீரும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். சிறப்பான நாள்.

தனுசு: கணவன்-மனை விக்குள் அன்யோன்யம் பிறக்கும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் தடைகள் உடைபடும். திட்டம் நிறைவேறும் நாள்.

மகரம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. சிக்கனம் தேவைப்படும் நாள்.

கும்பம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். உணவில் காரம், வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மீனம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

Previous articleகைவிரல் நகங்களைத் தேய்ப்பதால் தலைமுடி உதிர்வதைத் தடுக்கலாம் எப்படி? !
Next articleசமையல் அறையின் துர்நாற்றத்தை போக்கும் எளிய வழிகள்?