இன்று 10 பேருக்கு மரணதண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி! இலங்கையை உலுக்கிய கொடூர சம்பவம்!

0
397

அங்குனுகொலபெலஸ்ஸ திக்வெவ ரதம்பல என்ற பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த தாய் அவரது 5 பிள்ளைகளை படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 12 சந்தேக நபர்களில் 10 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தங்காலை மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ். சப்புவிந்த இன்று இந்த மரண தண்டனை தீர்ப்பை வழங்கியுள்ளார். இந்த படுகொலை சம்பவம் தொடர்பான 23 பேருக்கு எதிராக பொலிஸார் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இவர்களில் 4 பேர் விசாரணைகளின் இடைநடுவில் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் தலைமறைவாக உள்ளனர். இவர்களை கைதுசெய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

கடந்த 1998ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் திகதி இந்த கொலை படுகொலை சம்பவம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஇதெல்லாம் தேவையா?புகைப்படத்துக்கு பயந்து அரைகுறைஉடையுடன் ஒளிந்த ஸ்ரீதேவிமகள்!
Next articleநெஞ்சை கனக்க வைக்கும் சம்பவம்! கிணற்றில் இருந்து 5 குழந்தைகளின் சடலங்கள் மீட்பு!