சுக்கிரன் அதிபதியாக இருக்கும் துலாம் ராசியில், புதன் பகவானின் சஞ்சாரம் செப்டம்பர் 22ம் தேதி (இன்று) நிகழ்கின்றது.
ஜோதிடத்தில் சுபமான மற்றும் அமைதியான கிரகமாக புதன் கிரகம் கருதப்படுகிறது.
அவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகும் போதெல்லாம் ஒவ்வொரு ராசிக்கும் சில முக்கிய விளைவுகள் நடக்கும்.
அந்த வகையில் சுக்கிரன் ஆளும் துலாம் ராசியில் புதன் வருவதால் எந்தெந்த ராசியினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
ரிஷபம்
உங்கள் ராசிக்கு 6ம் இடமான நோய், எதிரி ஸ்தானத்தில் புதனின் சஞ்சாரம் நிகழ உள்ளதால், உங்கள் வாழ்க்கையில் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
வியாபாரம், தொழில் செய்யக்கூடியவர்கள் அவர்கள் பணிபுரியும் துறையில் உள்ள எதிரிகளிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதிரிகள் உங்களுக்கு எதிராக சதி செயலில் ஈடுபடலாம்.
அதனால் எந்த ஒரு செயலிலும் கவனமாக செயல்படுவது நல்லது.
பரிகாரம் : பெரியவர்களின் ஆசீர்வாதம் வாங்குவது நல்லது.
சிம்மம்
உங்கள் ராசிக்கு 3ம் இடமான தைரிய ஸ்தானத்தில் துலாம் ராசியில் புதனின் மாற்றத்தால், மற்றவர்கள் உங்கள் மீது கோபப்படுவது, புண்படுத்துவதைத் தவிர்ப்பது அவசியம். பேச்சு, செயலில் கவனம் தேவை.
தேவையற்ற விவாதங்களில் ஈடுபட வேண்டாம். உங்களின் அதிக பேச்சு சமூகத்தில் கெளரவத்தை குறைக்கலாம்.
பரிகாரம்: பசுவிற்கு பசுந்தீவனத்தைக் கொடுப்பதன் மூலம் சுபமான முடிவுகளைப் பெறுவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கு 12ம் இடமான விரய ஸ்தானத்தில் புதன் பகவானின் சஞ்சாரம் காரணமாக உங்கள் பிரச்சினைகள் சற்று அதிகரிக்கும். நிதி நிலைமை பலவீனமாக இருக்கலாம். பண பரிவர்த்தனைகள் தொடர்பான விஷயங்களில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்கவும்.
கூட்டணி, பங்குதாரர்களுடன் வியாபாரம் செய்தால் உங்கள் கூட்டாளிகளின் செயல்பாடுகளைக் கவனியுங்கள். நீங்களே முன்னின்று எந்த ஒரு செயலையும் செய்ய இழப்பு குறைந்து லாபம் அதிகரிக்கும்.
மீனம்
குரு பகவான் ஆளக்கூடிய மீனம் ராசிக்கு 8ம் இடமான ஆயுள், துஸ் ஸ்தானத்தில் புதன் கிரகத்தின் சஞ்சாரம் நிகழ்கிறது. இந்த காலத்தில் மீன ராசியினர் அவர்களின் உடல் நலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உணவு விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.