செவ்வாய் கிரகத்தின் அக்டோபர் 22, 2021 அன்று, கன்னி ராசியிலிருந்து சுக்கிரனுக்குச் சொந்தமான துலாம் ராசிக்குப் பெயர்ச்சி ஆகி அக்டோபர் 22 முதல் டிசம்பர் 5ம் தேதி வரை துலாம் ராசியில் சஞ்சாரம் செய்வார்.
இதனால் 12 ராசியினருக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.
மேஷம்
மேஷ ராசியின் அதிபதியான செவ்வாய் 7ம் வீடான துணை, மனைவி, தொழில் கூட்டாளி ஆகியவற்றை குறிக்கும் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் உங்களின் தொழில், வியாபாரத்தில் உங்கள் பங்குதாரர்களால் சுப பலன்கள் கிடைக்கும்.
அதே சமயம் உங்கள் குடும்ப வாழ்வில் கூடுதல் கவனமாகவும், விட்டுக் கொடுத்து செல்வதும் அவசியம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மன வருத்தம்,உறவில் சிறிது விரிசல் ஏற்படலாம், கோபத்தைக் கட்டுப்படுத்துவது அவசியம்.
ரிஷபம்
ரிஷப ராசி அபதியான சுக்கிரன் ஆளும் மற்றொரு ராசியான துலாமில் செவ்வாயின் சஞ்சாரம் நிகழ்கிறது. ராசிக்கு 6ம் வீடான நோய், எதிரி ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால், குடும்பம், தொழில் என எந்த சூழலிலும் உங்களின் எதிரிகளை அடக்கி ஆளும் ஆதிக்கம் செலுத்துவீர்கள்.
தாய் வழி உறவில் பழகும் போது கவனம் தேவை. இல்லையெனில் உறவில் விரிசல் ஏற்படலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்கு 5ம் வீடான பூர்வ, புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் பகவானின் சஞ்சாரம் நிகழ்வதால், ஆரோக்கியம் அதிகரிக்கும். போட்டி, விளையாட்டு போன்றவற்றில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். இந்த காலத்தில் உங்கள் மன உறுதி அதிகமாக இருக்கும், இதனால் நீங்கள் எந்த செயலை செய்தாலும் அதில் சிறப்பாக செயல்பட முடியும்.
கடகம்
கடக ராசி அதிபதி சந்திரனின் நட்பு கிரகமான செவ்வாய் ராசிக்கு 4ம் வீடான சுக, தாயார் ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு புதிய வீடு, நிலம், வாகனம் வாங்க முயற்சி எடுப்பீர்கள். நீங்கள் எந்த துறையில் இருந்தாலும் உங்களுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படக்கூடியதாக இருக்கும். தாயின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது.
சிம்மம்
சிம்ம ராசிக்கு மூன்றாம் வீட்டில் ராசி அதிபதி சூரியனும், செவ்வாயும் சஞ்சரிப்பதால் உங்களின் தைரியம், ஆற்றல் அதிகரிக்கும். சில சாகச பயணங்கள், சாகச வேலைகளை செய்வீர்கள். உங்கள் இளைய சகோதரர் வகையில் உங்களுக்கு நன்மை ஏற்படும்.
கன்னி
கன்னி ராசிக்கு 2ம் வீடான தன ஸ்தானத்தில் செவ்வாயின் சஞ்சாரம் காரணமாக பல வகையில் உங்களுக்கு பண வரவு வர வாய்ப்புள்ளது. உங்கள் பேச்சால் செயல்களை சாதிப்பீர்கள். இருப்பினும் நீங்கள் தேர்ந்தெடுத்து வார்த்தைகளைப் பிரயோகிப்பது அவசியம்.
துலாம்
துலாம் ராசியில் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் அவர் மூலம் நன்மைகளைத் தரக்கூடியதாக இருக்கும். உங்களின் ஆற்றல், புத்துணர்ச்சி அதிகரிக்கும். அதை சரியாக பயன்படுத்தினால் எந்த செயலையும் விரைவாக செய்து முடிக்கலாம். மனதை கட்டுப்படுத்துவதால் மன அமைதியின்மை நீங்கும். நீங்கள் யோகா-தியானம் செய்தால், நீங்கள் பயனடையலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசி அதிபதியான செவ்வாய் விரய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. உங்களின் ஆற்றல் குறைந்தது போல உணருவீர்கள். சோம்பலான மன நிலையுடன் இருப்பீர்கள். இந்த காலத்தில் நிதி நிலையில் கவனம் தேவை. செலவு செய்யும் முன் யோசித்து தேவையானதை மட்டும் வாங்குவது அவசியம்.
தனுசு
தனுசு ராசிக்கு லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் எதிலும் நம்பிக்கையும், உங்கள் முயற்சியால் லாபமும் பெற்றிடுவீர்கள். இந்த பெயர்ச்சி காலத்தில் உங்களின் மூத்த சகோதரர்கள் வகையில் ஆதரவு பெறுவீர்கள்.
நீங்கள் மருத்துவத் துறை, இராணுவம், காவல்துறை போன்றவற்றில் பணிபுரிந்தால் பல சலுகைகளும், நன்மைகளையும் பெறலாம்.
மகரம்
செவ்வாய் உங்கள் ராசிக்கு 10ம் வீடான தொழில், கர்ம ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியைப் பெறலாம். மகர ராசியில் பிறந்தவர்களுக்கு அவர்களின் தசா, புத்தி சிறப்பாக இருப்பின், நீங்கள் திட்டமிட்டபடி சொந்த தொழிலைத் தொடங்கலாம்.
கும்பம்
கும்ப ராசிக்கு 9ம் வீடான தந்தை, பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் சஞ்சாரம் செய்ய உள்ளார். உங்களின் ஆசான், தந்தை போன்றோருடன் கவனமாக பேசுவது அவசியம்.
அவர்களின் அறிவுரை, ஆலோசனைகளைக் கேட்டு நடந்து கொள்வது நல்லது. மனைவி வீட்டாரிடம் சுமூக உறவை கடைப்பிடிக்கவும்.
மீனம்
மீன ராசியினர் சற்று கவனமுடன் இருக்க வேண்டிய காலம். திடீர் பயணங்கள் உங்களுக்கு ஆதாயங்களைப் பெற்று தந்தாலும், அலைச்சல், மன உளைச்சல், தேவையற்ற உடல் நலப் பிரச்சினைகளைத் தரக்கூடும். சிலருக்கு வயிறு சார்ந்த பிரச்னைகள் ஏற்படுத்தும்.ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது.