இன்று காரைநகரிலிருந்து யாழ்பாணத்தை நோக்கி சென்ற இலங்கை போக்கு வரத்து சபை பஸ் வண்டி ஒன்று இன்று (30/04/2020) வியாழக்கிழமை வேகக் கட்டுப்பாட்டை இழந்த சூழ் நிலையில் கடலில் வீழ்ந்து பாரிய விபத்துக்கு உள்ளாகியது.

“பொன்னாலைப்” பாலத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சாரதி மற்றும் நடத்துநர் உட்பட ஏழு (07) பயணிகள் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்படுள்ளனர்.





