புத்தாண்டு பிறந்தவுடன் வரும் முக்கிய நல்ல நாட்களில் அட்சய திருதியையும் முக்கியமான ஒரு நாளாகும். இந்த நாளில்தான் கிருத யுகத்தில் பிரம்ம தேவன் உலகை உருவாக்கியதாக நம்பப்படுகின்றது.
இந்த ஆண்டு மே 3 ஆம் தேதி செவ்வாய்கிழமை அதாவது நாளை இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்து மதத்தில் அட்சய திருதியை மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.
இந்த நாள் திருமணம், புது மனை புகுதல், புதிய வீடு மற்றும் வாகனம் வாங்குவது, புதிய கலைகளை கற்கத் துவங்குவது, பத்திரப்பதிவு ஆகியவற்ருக்கு ஏற்ற நாளாக கருதப்படுவதுடன் நேரம் காலம் பார்க்காமல் இந்நாளில் நல்ல காரியங்களை செய்யலாம்.
அட்சய திருதியை அன்று 3 ராஜயோகங்கள் உருவாகியுள்ளதால் இம்முறை மேலும் சிறப்பு பெற்றுள்ளது. அட்சய என்றால் அழியாதது. அட்சய திருதியை நாளில் செய்யும் செயல்கள் அழியாது அல்லது இந்த நாளில் செய்யும் செயல்கள் பல நன்மைகளைத் தரும் என்பது நம்பிக்கை.
எனவே, இந்நாளில் புண்ணிய நதிகளில் நீராடுதல், வழிபாடு செய்தல், தானம் செய்தல், ஷாப்பிங் செய்தல் போன்றவற்றின் முக்கியத்துவம் அதிகம்.
இந்த வருடம் மே 3ம் தேதி அட்சய திருதியை அன்று கிரகங்களின் நிலை மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. இதன் காரணமாக மாளவ்ய ராஜயோகம், ஹம்ச ராஜயோகம், சச ராஜயோகம் ஆகியவை இந்த நாளில் உருவாகின்றன.
அட்சய திருதியை அன்று இந்த ராஜயோகங்கள் அமைவது மிகவும் மங்களகரமானது. இந்த ராஜயோகத்தில் எந்த ஒரு சுப காரியம் செய்தாலும் நல்ல பலன்கள் கிடைக்கும்.
அட்சய திருதியை அன்று காலை 05:39 முதல் மதியம் 12:18 வரை வழிபாடு செய்ய உகந்த நேரம். அதே சமயம், தங்கம்-வெள்ளி, வீடு, வாகனம் போன்றவற்றை வாங்குவதற்கான சுப நேரம் காலை 05:39 மணி முதல் மறுநாள் காலை 05:38 மணி வரை இருக்கும்.
இந்த முறை அட்சய திருதியை ரோகிணி நட்சத்திரத்தின் ஷோபன யோகத்தில் கொண்டாடப்படும். இத்தகைய மங்களகரமான யோகம் கொண்ட அட்சய திருதியை 30 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிறது.
மேலும் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த நாளில் கிரகங்களின் நிலையும் மிகவும் சிறப்பாக இருக்கும். அட்சய திருதியை அன்று சந்திரன் தனது உச்ச ராசியான ரிஷப ராசியிலும், சுக்கிரன் தனது உச்ச ராசியான மீன ராசியிலும் இருப்பார்கள்.
இது தவிர, சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்திலும், தேவகுரு வியாழன் தனது சொந்த ராசியான மீனத்திலும் இருப்பார்கள். அதாவது 4 கிரகங்கள் இப்படி அனுகூலமான நிலையில் இருப்பது மிகவும் விசேஷமானதாகவும், மங்களகரமானதாகவும் இருக்கும்.