நமது எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் நமது கைரேகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நமது கையில் இருக்கும் அனைத்து ரேகைகளுக்கும், சின்னங்களுக்கும் ஏன் சின்ன சின்ன கோடுகளுக்கு கூட ஒரு அர்த்தமும், முக்கியத்துவமும் உள்ளது. இந்த ரேகைகள் நமது எதிர்காலத்தை பற்றி அறிந்து கொள்ள உதவுகிறது.
நமது கையிலிருக்கும் ரேகைகளில் முக்கியமான ஒரு ரேகை சூரிய ரேகை ஆகும். நமது வாழ்க்கையில் வரப்போகும் ஏற்ற இறக்கங்கள் அனைத்திற்கும் இந்த சூரிய ரேகை மிகவும் முக்கியமானதாகும். இந்த பதிவில் சூரிய ரேகையின் முக்கியத்துவம் பற்றியும், அது உங்கள் எதிர்காலம் பற்றி என்ன கூறுகிறது என்பதையும் பார்க்கலாம்.
சூரிய ரேகை
சூரிய ரேகை என்பது அப்பல்லோ கோடு என்றும் அழைக்கப்படுகிறது. இது நமது கையின் சூரிய மேடு மற்றும் மோதிர விரலுக்கு கீழே தொடங்கி கீழ்நோக்கி நகரும். இது புகழுடன் தொடர்புடைய ரேகையாகும். இந்த ரேகை இல்லாமல் இருப்பவர்கள் புகழ் மற்றும் நற்பெயர் இல்லாமல் வாழ்வார்கள். இந்த சூழ்நிலையில் பலவீனமான விதி ரேகையும், வலிமையான சூரிய கோடும் இருந்தால் இந்த நிலை ஏற்படாது.

விதி ரேகை
பல கைரேகை நிபுணர்களின் கருத்துப்படி விதி ரேகை ஒருவரின் அதிர்ஷ்டத்தை நிர்ணயிக்கிறது. இந்த ரேகை சரியாக அமையாதவர்கள் கூட ஆழமான, நேரான, குறுக்கீடு இல்லாத சூரிய ரேகை இருந்தால் அதிர்ஷ்டத்தை பெறுவார்கள். நல்ல விதி ரேகையால் கிடைக்கும் வெற்றியை இந்த சூரிய ரேகை வழங்கக்கூடும்.

கற்பனைத்திறன்
இந்த சூரிய ரேகை ஒருவரின் கற்பனைத்திறனை பற்றியும் உணர்த்தக்கூடும். இது அனைத்து கலைகளின் மீதும் இருக்கும் ஆர்வத்தை உணர்த்தும். கலைகளில் நிபுணத்துவம் பெற்றிருக்கும் பலரும் இந்த சூரிய ரேகையை பெற்றிருப்பார்கள். வலிமையான சூரிய ரேகை இருப்பவர்கள் அதிக வெற்றிகளை குவிப்பார்கள். ஆனால் இந்த ரேகை ஒழுங்கின்றி இருந்தால் அவர்களின் வெற்றி நிரந்தரமானதாக இருக்காது. இந்த ரேகை இருப்பவர்கள் எவ்வளவு சீக்கிரம் மேலே செல்கிறார்களோ அவ்வளவு விரைவில் கீழே வந்துவிடுவார்கள்.
அப்போலோ ரேகை
இது ஓர் அதிருஷ்ட வாழ்க்கையைக் குறிக்கிறது; இது மணிக்கட்டில் இருக்கும் சந்தர மேட்டில் இருந்து, மோதிர விரலுக்கு (அப்போலோ விரலுக்கு) இடையில் பயணிக்கி றது. நீளமான அப்போலோ ரேகை என்பது மிகவும் அபூர்வமானதாகும். சூரிய ரேகை உங்களுடைய தலைமை ரேகையில் சென்று முடிந்தால் அவர்கள் மிகவும் புத்திசாலிகளாக இருப்பார்கள். அதுவே இதய கோட்டில் முடிந்தால் அவர்கள் பரந்த மனம் உடையவர்களாக இருப்பார்கள். சூரிய ரேகை விதி ரேகையில் முடிந்தால் அவர்கள் சிறு வயதிலேயே பெரும் புகழை பெறுவார்கள். ஆனால் அது சனி ரேகையை நோக்கி சென்றால் அது மிகவும் மோசமான நிலையாகும்.

முக்கோணம்
உங்கள் கையில் முக்கோண சின்னம் இருந்தால் அது மகிவும் அதிர்ஷ்டமான ஒன்றாகும். உங்கள் கைரேகையில் இருக்கும் விரிசல்கள், இடைவெளிகள், புள்ளிகள் அனைத்துமே துர்சகுனத்தின் அடையாளம்தான். அதேபோல ஒன்றுக்கும் மேற்பட்ட சூரிய ரேகைகள் ஒன்றோடொன்று நேராக பயணித்தால் அது நல்ல சகுனமாகும். அத்தனை துறைகளில் நீங்கள் வெற்றியை குவிப்பீர்கள்.

மணிக்கட்டு ரேகை
சூரிய மேட்டிலிருந்து தொடங்கும் சூரிய ரேகை மணிக்கட்டு ரேகை வரை நீண்டு செல்வது சூதாட்டத்தில் ஈடுபடுவர்களுக்கு ராசியானதாகும். உங்கள் நடுவிரலை விட மோதிர விரல் நீளமாக இருந்து அதில் சூரிய ரேகை இருந்தால் அவர்கள் ஈடுபடும் அனைத்து பந்தயத்தில் வெற்றி பெறுவார்கள்.
