ஒரு செயலை செய்யும் போது, எல்லாவற்றையும் திட்டம் போட்டி சரியாக செய்ய முடியாது. அப்படி சில செயல்கள் நம்மை அறியாமலே தவறாக முடிந்துவிடும். இதற்கெல்லாம் ஒரு வகையிக் அவர்களின் ராசியும் கூட காரணமாக இருக்கும். இந்த பதிவில் எந்தெந்த ராசிகாரர்களுக்கு இயற்கையிலேயே தொலைநோக்கு பார்வை இருக்குமென்று பார்க்கலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் மற்றவர்களிடம் அறிவுரை கேட்பது அவர்கள் எடுத்த முடிவை பற்றி மற்றவர்களிடம் விவாதிப்பதற்காக மட்டும்தான். தன்னைத் தவிர தனக்கு ஏற்றது எது என்பதை யாராலும் கூற முடியாது என்பது இவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். அவர்களுக்காக நேரம் ஒதுக்கி அவர்களின் நலனுக்காக அறிவுரை கூறுவதை அவர்கள் பாராட்டுவார்கள். ஆனால் முடிவெடுக்க வேண்டிய நேரத்தில் உங்களின் வார்த்தைகளை அவர்கள் செயல்படுத்த மாட்டார்கள்.
ரிஷபம்
பொதுவாக ரிஷப ராசிக்காரர்கள் ஆலோசனை கேட்கும்போது, யாராவது அவர்களுடன் உடன்பட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். மற்றவர்களின் கருத்துகளையும், யோசனைகளையும் பெறுவது மிகச் சிறந்தது என்று இவர்கள் நன்கு அறிவார்கள், ஆனால் அவர்களுக்கு சிறந்த ஆலோசனையை வழங்க அவர்கள் நம்புபவது அவர்களை மட்டும்தான். தான் எதை செய்ய வேண்டும் என்று மற்றவர்கள் கூறுவது இவர்களுக்கு நகைப்புக்கு உரியதாகும். ஒரு முடிவை இவர்கள் எடுத்துவிட்டால் அதற்குபின் இவர்களை வேறொரு விஷயத்திற்கு சம்மதிக்க வைப்பது நடக்காத காரியமாகும்
தனுசு
தனுசு ராசிக்காரர்களிடம் நீங்கள் அறிவுரை கேட்கும்போது அவர்கள் நீங்கள் அதனை பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள், ஆனால் அவர்கள் இதை பின்பற்றமாட்டார்கள். தனுசு ராசிக்காரர்கள் பிரச்சினைகளை ஆராயும்போதும், அதனை பற்ற விவாதிக்கும்போதும் மற்றவர்களின் அறிவுரைகளை கேட்பார்கள். ஆனால் அதனை செயல்படுத்தும்போது அதில் இருந்து தவறிவிடுகிறார்கள்.
இதற்கு அடிப்படை காரணம் தனுசு ராசிக்காரர்களுக்கு தங்கள் மீதிருக்கும் நம்பிக்கையாகும். மற்றவர்கள் எவ்வளவு அறிவுரைகள் கூறுகிறார்கள் என்பதை பற்றி இவர்க்ளுக்கு கவலை இல்லை. இறுதி முடிவு இவர்கள் சுயமாக எடுப்பதாகத்தான் இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் அவர்களுக்கு அறிவுரை கூறுபவர்களை மதிப்பார்கள், நேசிக்கவும் செய்வார்கள். ஆனால் அவர்களுக்குள் மற்றவர் எதைப்பற்றி பேசுகிறார்கள் என்பதை பற்றிய கவலையே இல்லாமல் இருப்பார்கள். விருச்சிக ராசிக்காரர்கள் யாரையும் அவ்வளவு சீக்கிரத்தில் நம்பிவிட மாட்டார்கள், இது அவர்களின் அறிவுரை கேட்கும் தன்மையை மேலும் குறைக்கும். இவர்களுக்கு தங்களுக்கு தேவையான சரியான அறிவுரையை யாராவது கூறுவார்கள் என்ற நம்பிக்கை எப்பொழுது இருக்கும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக யாரும் அவ்வாறு வழங்குவதில்லை.
மீனம்
மீன ராசிக்காரர்கள் கேட்கும் ஒவ்வொரு அறிவுரைக்குப் பின்னாலும் அவர்களுக்கு ஒரு நோக்கம் இருக்கும். ஆனால் முடிவெடுக்கும்போது அவர்கள் இதயம் சொல்வதைத்தான் கேட்பார்கள். இவர்கள் எப்பொழுதும் தங்கள் உள்ளுணர்வு கூறுவதை கவனிப்பவர்களாக இருப்பவர்கள், அதேசமயம் இவர்கள் மிகவும் இறக்கமுள்ளவர்களாகவும் இருப்பார்கள். எனவே ஒருவர் அறிவுரை கூறும்போது அதனை நிராகரித்து அவர்களை புண்படுத்துவதை இவர்கள் விரும்பமாட்டார்கள்.
எனவே நீங்கள் அறிவுரை கூறும்போது அதனை கவனிப்பதும் போலவும் அதனை செயல்படுத்துவது போலவும் பேசுவார்கள் ஆனால் இறுதியில் தாங்கள் நினைத்ததை செய்துவிடுவார்கள்.




