இந்த பொருட்களை கொண்டு சிவபெருமானை வழிபட்டால் அவரின் கோபத்தால் நீங்கள் அழிவது உறுதி!

0

இந்த பொருட்களை கொண்டு சிவபெருமானை வழிபட்டால் அவரின் கோபத்தால் நீங்கள் அழிவது உறுதி!

உலகம் முழுவதும் கடவுளை நம்பும் அனைவரின் வீட்டிலும் நிச்சயம் ஒரு பூஜையறை இருக்கும். பூஜையறை வைக்க இடம் இல்லை என்றாலும் குறைந்தது கடவுளை வணங்குவதற்கு என ஒரு இடத்தை தனியாக ஒதுக்கி இருப்பார்கள். இவ்வாறு கடவுளை வணங்க என ஒதுக்கப்படும் அனைத்து இடங்களுமே ஒரு கோவில்தான். பெரும்பாலான வீட்டு பூஜைகளும், வழிபாடுகளும் இந்த இடத்தில்தான் நடத்தப்படுகிறது.

கோவிலுக்கு சென்று கூட்டத்துடன் கூட்டமாக கடவுளை வணங்குவதை விட வீட்டு கோவிலில் உள்ளம் உருக நீங்கள் முறையாக பூஜைகள் செய்து வழிபடும் போது அது உங்களுக்கு அதிக பலனையும், மனஅமைதியையும் தரும்.அவ்வாறு கடவுளை வீட்டில் வைத்து வழிபடும்போது சில முக்கியமான தகல்வளை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும், இல்லையெனில் அது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். இந்த பதிவில் வீட்டில் கடவுளை வழிபடும் போது என்னென்ன செய்யவேண்டும் என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அரிசி பிரசாதம் வீட்டில் எந்த பூஜை செய்தாலும் அதற்கு பிரசாதமாக அரிசியால் செய்யப்பட்ட பொருளை வைத்து வழிபடுங்கள். ஏனெனில் அரிசிதான் கடவுள்களின் உணவாக இருந்தது என்று புராணக்குறிப்புகள் கூறுகிறது.

வெற்றிலை வீட்டில் சாமி கும்பிடும் போதெல்லாம் வெற்றிலை வைத்து வழிபடுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். வெற்றிலை கடவுளுக்கு மிகவும் பிடித்த பொருளாகும். மேலும் ஏலக்காய் மற்றும் எலுமிச்சை போன்ற பொருட்களையும் வைத்து வழிபடலாம்.

மண் விளக்கு பூஜையின் போது மண் விளக்கு ஏற்றி வைக்கவும். ஆனால் விளக்கு மிகவும் அதிகமாகவோ அல்லது அணையும் படியோ ஆகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இது உங்கள் மனதை சங்கடப்படுத்துவதோடு துர்சகுனமாகவும் கருதப்படுகிறது. விளக்கு எப்பொழுதும் கடவுளை நோக்கியே இருக்க வேண்டும், வெகு எங்கும் வைக்கக்கூடாது.

உடைகள் ஒவ்வொரு கடவுளுக்கும் பிடித்த நிறம் என்று ஒன்றிருக்கும். அந்த நிற உடை அணிந்து கடவுளை வழிபடும் போது உங்களுக்கு ஆண்டவனின் அருள் பூர்ணமாக கிடைக்கும். விஷ்ணுவை வழிபடும் போது மஞ்சள் நிற ஆடையையும், துர்கை அம்மனை வழிபடும் போது சிவப்பு நிற துணியையும் அணிய வேண்டும். எம்பெருமான் ஈசனை வழிபடும் போது வெள்ளை நிற ஆடை அணிந்து வழிபட்டால் அவரின் கோபத்தில் இருந்து தப்பிப்பதுடன் அருளையும் பெறலாம்.

குலதெய்வம் அனைவரும் அவர்கள் வீட்டில் தங்களுடைய குலதெய்வத்தின் ஊர்வசிலையையோ அல்லது படத்தையோ வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். தினமும் தங்கள் குலதெய்வத்தை வணங்குவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். குலதெய்வ வழிபாடு உங்களை அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் பாதுகாக்க மிகவும் அவசியமானதாகும்.

நெய் தீபமேற்றுவது என்பது கடவுள் வழிபாட்டில் இருக்கும் முக்கியமான ஒன்றாகும். வீட்டிலேயே கடவுளை வழிபட்டாலும் நெய் விளக்கேற்றி வழிபடுங்கள். தினமும் நெய் விளக்கேற்றும் வீட்டில் தீய சக்திகள் நுழைய முடியாது நம்பிக்கையாகும். நெய் தீபத்திற்கு எப்பொழுதும் பஞ்சை திரியாக உபயோகியுங்கள்.

பஞ்சதேவர் உங்கள் வீட்டில் பஞ்சதேவர் என்று அழைக்கப்படும் இந்த ஐந்து கடவுள்களை தினமும் வழிபடுவது உங்களுடைய அனைத்து பிரச்சினைகளையும் சரிப்படுத்தும். பஞ்சதேவ கடவுள்கள் யாரெனில் சூரியபகவான், விநாயகர், துர்கை, சிவபெருமான் மற்றும் விஷ்ணு ஆவர்.

துளசி இலைகள் துளசி இலைகள் 12 நாட்கள் வரை வாடாமல் இருக்கும் என்று உங்களுக்கு தெரியுமா? தினமும் புனித நீருடன் துளசியை வைத்து நீங்கள் கடவுளை வழிபடலாம்.ஆனால் விநாயகரை வழிபடும் போது துளசியை உபயோகிக்காதீர்கள்.

சிறப்பு பூஜை வீட்டில் ஏதாவது சிறப்பு பூஜை செய்யும்போது, உங்களின் வழக்கமான சடங்குகளுடன் பிராமணர் ஒருவருக்கு உணவளிப்பதை பழக்கமாக்கி கொள்ளுங்கள்.

சிவ வழிபாடு பூஜையறை என்னும் போது அதில் சிவபெருமான் இல்லாமல் இருக்க வாய்ப்பேயில்லை. ஆனால் மற்ற கடவுள்களை போலவே சிவெபருமானையும் வழிபட இயலாது. ஏனெனில் மற்ற கடவுள்களுக்கு வைத்து வழிபடும் சிலாப் பொருட்கள் சிவபெருமானின் கோபத்தை தூண்டும். உதாரணத்திற்கு மஞ்சள், கேதகை மலர், துளசி, தேங்காய் தண்ணீர் போன்றவற்றை வைத்து வழிபடுவது சிவபெருமானின் சாபத்தை உங்களுக்கு பெற்றுத்தரும்.

Previous articleபொடுகை நிரந்தரமாக போக்கும் சக்தி வாய்ந்த நாட்டு மூலிகை!
Next articleமுதலிரவிற்கு முன் செய்ய வேண்டிய முக்கியமான காரியங்களென காம சாஸ்திரம் கூறுவது என்ன தெரியுமா?