இயக்குனர் ஷங்கர் 2.0 படத்தை துவங்கியபோது பறவைமனிதன் வேடத்திற்கு ஹாலிவுட் நடிகர் அர்னால்டை தான் முதலில் அணுகினார். ஆனால் அவர் நிராகரித்துவிட்டதால் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் அந்த ரோலில் நடிக்க தேர்வானார்.
மேலும் மிக பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகும் இந்த படத்தை ஏன் அர்னால்டு நிராகரித்தார் என்பதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. படத்திற்கான ஒப்பந்தத்தில் சில விஷயங்களை சேர்க்கும்படி அர்னால்டு கூறினாராம்.
படத்தின் தயாரிப்பு மற்றும் ஷூட்டிங் பணிகள் ஹாலிவுட் தரத்திற்கு இணையாக இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டாராம். ஆனால் இந்திய சினிமாவில் இந்த பட்ஜெட்டில் சாத்தியம் இல்லை என்பதால் லைகா நிறுவனம் பின்வாங்கிவிட்டது.
அக்ஷய் குமார் 2.0வில் நடிக்க ஒப்புக்கொண்டு பல்வேறு மோசமான சமயங்களில் படக்குழுவுக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். மேலும் ரஜினி உடல்நிலை சரியில்லாமல் ஷூட்டிங் நிறுத்தப்பட்டபோது கூட அவர் படக்குழுவுக்கு ஆதரவாக இருந்துள்ளார்.




