கொரொனா வைரஸ் தொற்று

இந்தியாவின் பிரபல பாடகரான கியானி நிர்மல் சிங் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்ட நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
திரைப்படங்கள் மட்டும் இன்றி இசை நிகழ்ச்சிகளில் பாடி வந்த கியானி நிர்மல் சிங் வெளிநாட்டில் இசை நிகழ்ச்சி ஒன்றை முடிந்துக் கொண்டு பெப்ரவரி மாதத்தின் இறுதியில் நாடு திரும்பி இருந்தார்.
பின்னர் பொற்கோயிலில் பிரபல கலைஞர்களுடன் இசை நிகழ்ச்சியை நடத்திய இவர் இறுதியாக டெல்லியில் சில இசை நிகழ்ச்சிகள் நடத்தி வந்த நிலையில் இவருக்கு மூச்சித் திணறல் மற்றும் கொரோனா வைரஸ் அறிகுறிகள் காணப் பட்டமையால் மார்ச் 30ம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டு பரிசோதனை செய்யப் பட்ட நிலையில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப் பட்டது.
இதனை தொடர்ந்து கொரொனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வந்த கியானி நிர்மல் சிங் இன்று ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார். இந்த செய்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவருக்கு திரையுலகத்தினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
