Home thatstamil one india tamil oneindia tamil இதை பார்த்தா நிச்சயம் ஷாக் ஆகுவீங்க! இறந்த தாயின் சடலத்தின் மீது அமர்ந்து மகன் செய்த...

இதை பார்த்தா நிச்சயம் ஷாக் ஆகுவீங்க! இறந்த தாயின் சடலத்தின் மீது அமர்ந்து மகன் செய்த காரியம்!

0
430

தமிழகத்தில் திருவெறும்பூர் அருகே அகோரி ஒருவர் இறந்த தனது தாய்க்கு விசித்திரமான முறையில் இறுதிச் சடங்கு செய்தது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே அரியமங்கலத்தில் ஜெய் அகோர காளி கோவில் உள்ளது. இதனை காசியில் அகோரி பயிற்சி பெற்ற மணிகண்டன் என்பவர் நிர்வகித்து வருகிறார்.

இந்நிலையில், அகோரி மணிகண்டனின் தாயார் மேரி திடீரென மரணமடைந்தார். இதையடுத்து அவரது உடல் அடக்கம் அரியமங்கலம் மத நல்லிணக்க இடுகாட்டில் நடைபெற்றது. முன்னதாக மேரியின் உடலை ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

இதில் அகோரிகள் மற்றும் பக்தர்கள் பலர் பங்கேற்றனர். இடுகாட்டிற்கு சென்றதும் இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அப்போது அகோரி மணிகண்டன் தனது தாயின் உடல் மீது அமர்ந்து, மந்திரங்கள் ஓத பூஜைகள் செய்தார். அவருடன் சக அகோரிகளும் டம்ரா மேளம் முழங்க, சங்கு ஊதி அகோரி பூஜை நடத்தினர்.
இவ்வாறு இறந்தவரின் உடல் மீது அமர்ந்து அஞ்சலி பூஜை நடத்தினால் அவரது ஆன்மா இறைவனை சென்றடையும் என்று விளக்கம் கூறப்பட்டது. இது அகோரிகளின் வழக்கமாகவும் இருந்து வருகிறது.

இதையடுத்து மேரியின் உடலுக்கு தீபாராதனை காட்டப்பட்டு, அடக்கம் செய்தனர். மரணமடைந்த தாயின் உடல் மீது அமர்ந்து அகோரி நடத்திய விசித்திர பூஜையானது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleஅதிசயம் தெரியுமா? நந்தி சிலையின் வாயிலிருந்து ரத்தம் வடியும் சிறப்பு!
Next articleகல்லூரி மாணவி கதறல்! என்னை கொலை செய்து விடுவார்கள்! காதலனுடன் சேர்த்து வைங்க!