இதைச் செய்தால் வீட்டிற்குள் தெய்வ சக்தி அதிகரிக்குமாம்!

0

புதிதாக வீடு கட்டி குடிபோகும் போதோ அல்லது வாடகை வீட்டிற்குச் செல்லும் போதோ நாம் வசிக்கப்போகும் வீட்டில் தெய்வ அம்சம் பொருந்தி இருக்க வேண்டும் என்று அனைவரும் எதிர்ப்பார்ப்பது தான்.

நாம் புதிதாக ஒரு வீட்டுக்கு செல்லும் போது அத்தகைய அம்சம் நிறைந்ததிருக்கின்றதா இல்லையா என்பதை நம்மால் உணர முடியாது. அந்த வகையில், அந்த வீட்டின் உள்ளே தெய்வ சக்தியினை நுழைய செய்யலாம். தெய்வ அம்சம் இருந்தால் மட்டுமே நமக்குச் சகல செல்வங்களும், வெற்றியும் கிடைக்கும்.

வீட்டில் சில செயல்களை செய்தால் தெய்வ சக்தி விலகிவிடும், சில செயல்கள் செய்தால் தெய்வ சக்தி நுழையும் எனக் கூறப்படுகின்றது.

ஒரு வீட்டில் தெய்வ சக்தி அதிகம் இருந்தால், அந்த வீட்டில் நன்மையே அதிகம் நடக்கும். வீட்டில் இருக்கும் நபர்களை எந்த ஒரு கெட்ட சக்தியும் அண்டாது. வீட்டில் தெய்வ சக்தி நுழைவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

வீட்டில் அணில், சிட்டுக்குருவி, புறா போன்ற பறவைகள் மற்றும் விலங்குகள் இருந்தால் தெய்வ சக்தி அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த உயிரினங்களுக்குத் தெய்வ சக்தியை அறியும் ஆற்றல் உள்ளது எனவும் சொல்லப்படுகிறது.

அதுமட்டுமின்றி புதிதாக குடிபோகும் வாடகை வீடு அல்லது சொந்த வீட்டிற்கு தெய்வ சக்தியினை கொண்டு வர ஜீவசக்தி கொண்ட ஏதாவது ஒரு உயிரினத்தை கொண்டு செல்ல வேண்டும். மனிதர்களை காட்டிலும் பறவைகளிடம் இந்த ஜீவசக்தியானது அதிகமாக உள்ளது.

உங்கள் வீட்டு வாசலில் நெற்கதிரை கட்டி தொங்கவிடுவதால் குருவி, புறா போன்ற பறவைகள் அதை உண்ண வந்து செல்லும். இந்தச் சந்தர்ப்பத்தில் அவை அங்கேயே கூடு கட்டி வாழும்.

புறா, குருவி போன்ற பறவைகள் கூடு கட்டினால் அதனைக் கலைக்கக்கூடாது. தெய்வ சக்தியை கொண்டு வரும் திறன் கொண்டவை இவை என்பதால், இவற்றின் கூட்டை கலைப்பது, வீட்டிற்கு கெட்ட சகுனமாக அமையலாம்.

புறா, குருவி போன்ற பறவைகள் மற்றும் அணில் போன்ற உயிரினங்கள் உங்கள் வீட்டிற்கு வந்தால், அவற்றை விரட்ட வேண்டாம். இவை நமது வீட்டிற்கு வந்து போனாலே நமக்கு தீமைகள் விலகி நன்மையே நடக்கும்.

புறா கூடு கட்ட வழி செய்வது, அணில் கூடு கட்டினால் கலைக்காமல் இருப்பது, சிட்டுக்குருவி வீடு கட்டுவது போன்றதெல்லாம் சாதகமான சக்திகளை கொண்டு வருவதற்கான ஆத்மாக்களாகும்.

இதுபோன்ற சாதகமான சக்தியைக் கொண்டு வரும் இவற்றையெல்லாம் நாம் விரட்டக்கூடாது. இவையெல்லாம் வந்துவிட்டுப் போனாலே நமக்கு நல்லது நடக்கும்.

முக்கியமானதொன்று…. யார் ஒருவர் வீட்டில் பில்லி, சூனியம் போன்ற விஷயங்களை செய்கின்றனரோ அவர்களின் வீட்டில் கட்டாயம் தெய்வ சக்தி நுழைவதில்லை.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇது ரொம்ப தவறு சரியான விளக்கம் வேண்டும் விஜய் டிவிக்கு மதுமிதா கணவரின் குற்றச்சாட்டு..!
Next articleகிட்டத்தட்ட 12 வருடங்களுக்குப் பிறகு பெரிய விடிவுகாலம் இந்த ராசிக்காரர்களுக்கு!