பேட்ட இந்திய சினிமாவே ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பில் உள்ளது.
இந்நிலையில் படத்தின் ட்ரைலர் தற்போது வெளிவந்து இணையத்தையே அதிர வைத்து வருகின்றது, இதில் ஆரம்பத்திலேயே காளி(ரஜினி) என்ற ஹாஸ்டல் வார்டனை பற்றி ஒரு கேங் பேசுகின்றது.
அதவாது ஒரு கல்லூரியில் ஏதோ ஒரு விஷயத்திற்காக சில கேங் உள்ளே வர, அதை ரஜினி அடித்து தும்சம் செய்கின்றார்.
அவரை மீறி தான் அந்த கல்லூரியில் கால் வைக்க முடியும் என்ற நிலை அந்த கூட்டத்திற்கு உருவாகிறது.
பெரும்பாலும், மேகா ஆகாஷை காப்பாற்றும் பணியில் கூட ரஜினி இருக்கலாம் என்று தெரிகின்றது. ஏன் மேகா ஆகாஷ் ரஜினி அல்லது சசிகுமார் பெண்ணாக கூட இருக்கலாம், அவருக்கு வரும் ஆபத்தை ரஜினி தடுத்து நிறுத்துகின்றார் என்பது போலவும் இருக்கலாம், மேலும், சசிகுமார் முஸ்லிமாக வருகிறார், அவரின் திருமண நிகழ்வில் தான் த்ரிஷாவை காட்டுகின்றனர். இந்து-முஸ்லிம் ஒற்றுமை குறித்தும் படத்தில் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. எது எப்படியோ மேகா ஆகாஷை வைத்து தான் முக்கிய கதை இருக்கும் என்பது தெரிகின்றது.
அது மட்டுமின்றி விஜய் சேதுபதி, நவாஸுதின் ஒரு கேங் போல் தெரிகின்றது, பாபி சிம்ஹாவும் படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரம் அதுவும் கல்லூரிக்குள்ளே இருந்து ரஜினியை நோட்டமிடும் கதாபாத்திரமாக இருக்கும் என தெரிகின்றது.
சரி இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும் ட்ரைலர் எப்படி? என்று கேட்டால் பக்கா மாஸ் தான், ரஜினி 69வயதிலும் சிம்ரனுடன் ரொமான்ஸ், இளைஞர்களுடன் ஆட்டம், பாட்டம், ‘சத்தியமா சொல்றேன், அடிச்சு அண்டர்வேர் அவுத்துவிட்ருவே, அப்றம் மானம் போச்சுனு சொல்லகூடாது’ என்ற வசனம் எல்லாம் பக்கா மாஸ்.
அதிலும் மதுரை பேக்ரவுண்டில் ரஜினி ஆடிக்கொண்டே வரும் லாஸ்ட் ஷாட், கண்டிப்பாக நீண்ட நாள் காத்திருந்த ரஜினி ரசிகர்களுக்கு கெடா விருந்து தான் என்று எதிர்ப்பார்க்கலாம், ஒரே வார்த்தை பேட்ட பராக்க்க்