மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆவணி மாதம் வளர்ச்சியான மாதமாக இருக்கும். கடகத்தில் இருக்கும் புதன் உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் இருப்பதால் நன்மைகள் தந்துக் கொண்டிருப்பார். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர வசதி பெருகும்.
புதன் பகவான் ஆகஸ்ட் 28-ம் தேதி சிம்மம் ராசிக்கு செல்வதால் அலைச்சல் உண்டாகும். இல்லத்தில் இருப்பவர்களுடன் வீண் வாக்குவாதம், சிறு சண்டை சச்சரவு உருவாகலாம் என்பதால் நிதானத்தை கடைப்பிடியுங்கள். வாழ்க்கை துணையிடம் மனக்கசப்பு வர வாய்ப்பு உள்ளதால் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள்.
புதன் பகவான் செப்டம்பர் 15-ம் தேதி கன்னி ராசிக்கு செல்வதால் நற்பலன்களை கொடுப்பார். குரு பகவானால் இல்லத்தில் சுப நிகழ்ச்சி பேச்சு வார்த்தைகள் நல்ல படியாக முடிவடையும். அலுவலத்தில் வேலை சுமை அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் வரக்கூடும். சுப விரயங்கள் ஏற்படும். இதுவரை இருந்து வந்த தடைகள் அகலும் என்பதால் சோம்பலை உதறித் தள்ளிவிட்டு முயற்சி செய்யுங்கள். சிறிய முயற்சி செய்தாலும் எதிர்பாராத வகையில் அதிக அளவில் நன்மை ஏற்படும் மாதமாக இருக்கப் போகின்றது.
பணவரவு சீராக வரக்கூடும். ஒரு சிலருக்கு வாங்கிய கடனை அடைப்பதற்கு போதிய அளவிற்கு வரவு இருக்கும். இதுவரை வேலை, தொழில், வியாபாரம் போன்றவற்றில் நிரந்தரமாக வருமானம் அமையவில்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு இந்த மாதம் ஏற்றமான மாதமாக அமையும்.
உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஜீவன ஸ்தானத்தில் இருப்பதால் தொழில், வியாபாரம் சிறக்கும். வெளிமாநிலம், வெளிநாடு சென்றவர்களுக்கு மாற்றங்கள் நிகழும். ஒரு சிலர் சொந்த ஊருக்கு திரும்ப வரவேண்டிய சூழ்நிலை வரக்கூடும். மாற்றங்கள் எதுவாயினும் உங்களுக்கு ஏற்றத்தை தரக்கூடியதாக இருக்கக்கூடும். மேஷம் ராசியினருக்கு மாத தொடக்கத்தை விட மாத பிற்பகுதியில் கூடுதல் வளர்ச்சியும், பணவரவும் இருக்கும்.
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆவணி மாதம் பொறுமையுடன் செயல்பட வேண்டிய மாதமாக இருக்கும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை சாதகமாக இருப்பதால் எடுக்கின்ற முயற்சிகளில் நல்லவை நடைபெறும். சுக்கிரன் ஐந்தாம் இடத்தில் இருப்பதால் மூத்தவர்களின் ஆதரவு கிட்டும். மனதில் புதிய உற்சாகம், தெளிவு பிறக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி வரக்கூடும். தொழிலில் லாபம் பெருகும். ஆகஸ்ட் 28-ம் தேதி வரை புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் உங்கள் மனதில் சோர்வு தோன்றக்கூடும். எதிலும் நிதானமாக செயல்பட வேண்டும்.
பெரிய முதலீடு செய்வதற்கு முன்பு ஒரு முறைக்கு பல முறை சிந்தித்த பிறகு செயலில் ஈடுபடுங்கள். வீட்டில் அனுபவமிக்க நபர்களிடம் கலந்து பேசி முடிவெடுங்கள். ராகு பகவானால் மாதம் முழுவதம் நன்மை நடைபெறக்கூடும். ஒரு சிலருக்கு வேலை அல்லது வியாபாரம் சம்மந்தமாக வெளியூர் செல்ல வேண்டியது இருக்கும். இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.
குரு பகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் இருப்பதால் உடல் நலக்குறைவு ஏற்படக்கூடும். மனதில் ஒரு வித தளர்ச்சி, வீண் பயம், தேவையில்லாத சிந்தனை தோன்றக்கூடும்.
குரு பகவான் சாதகமற்ற நிலையில் இருந்தாலும், அவரது ஒன்பதாம் பார்வை உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் விழுவதால் வருகின்ற இடையூர்களை எதிர்க்கும் ஆற்றல் பிறக்கும். சுக்கிரனால் பணப்புழக்கம் அதிகரிக்கும். அலுவலத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். ஒரு சிலர் குடும்பத்துடன் புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள்.
ரிஷப ராசியினருக்கு இப்பொழுது எதிர்காலத்திற்கான மாற்றங்கள் நடைபெறும் காலமாக இருக்கப் போகின்றது. அஷ்டம சனியின் ஆதிக்கம் தொடர்வதால் இளம் வயதில் இருக்கும் ரிஷபம் ராசியினர் கடுமையாக உழைக்க வேண்டி வரக்கூடும். வேலை பளு அதிகரிக்கும். மொத்தத்தில் ரிஷபம் ராசியினருக்கு மாற்றங்கள் நிகழ கூடிய மாதம் என்பதால் எல்லா விஷயத்திலும் பொறுமையாக செயல் பட வேண்டிய மாதமாக இருக்கப் போகின்றது.
மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆவணி மாதம் பணப்புழக்கம் அதிகரிக்கும் மாதமாக இருக்க போகின்றது. உங்கள் ராசிநாதன் புதன் வலு குறைந்து இருந்தாலும், குரு பார்வை உங்கள் ராசிக்கு இருப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் பிறக்கும்.
சுக்கிரனால் பணப்புழக்கம் அதிகரிக்கும். இந்த ஆவணி மாதத்தில் குரு, சூரியன் சாதகமாக இருப்பதால் நற்பலன்களை கொடுப்பர். இல்லத்தில் சுப விசேஷ பேச்சுவார்த்தைகள் நல்ல விதத்தில் முடிவடையும்.
தந்தை வழி உறவினர்களால் சண்டை உருவாகலாம். தந்தை உடல் நலத்தில் அக்கறை எடுத்து கொள்ளுங்கள். ஆகஸ்ட் 31-ம் தேதிக்குப் பிறகு உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். ஆறாம் இடத்திற்கு உரியவன் உச்சம் பெற்றுள்ளதால் வீடு, மனை வாங்கும் யோகம் வந்து இருக்கிறது.
உங்கள் ராசிக்கு ஏழாம் அதிபதியான குரு பகவான் வலு பெறுவதால் கணவன் மனைவி இடையே அந்யோன்யம் கூடும். மனதில் பக்தி உயரும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வேலை பளு அதிகரிப்பதால் சிறு விஷயத்திற்கு கூட எரிச்சல் படுவீர்கள். பொறுமையுடன், நிதானமாக இருக்க வேண்டிய காலம். வீண் விவாதங்களை தவிர்த்திடுங்கள்.
மாதம் முற்பகுதியை விட பிற்பகுதியில் அலுவகத்தில் நிம்மதியான சூழல் உண்டாகும். பொருளாதாரம் உயரும் என்பதால் சிக்கனமாக செலவு செய்யுங்கள். சகோதரிகள் பக்க பலமாக இருப்பார்கள். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த தொகை கைக்கு வரக்கூடும். வியாபாரம், தொழில் புரிகின்றவர்களுக்கு சூரியனால் வளர்ச்சி உண்டாகும். ஒரு சிலருக்கு உபரி வருமானம் வரக்கூடும்.
கடகம்
கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆவணி மாதம் முயற்சிக்கு ஏற்ற வெற்றி பெரும் மாதமாக இருக்கும். இந்த ஆவணி மாதத்தில் சனி, சுக்கிரனால் நன்மைகள் நடைபெறக்கூடும். தேவைகள் பூர்த்தியாகும்.
புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் அலைச்சல், மறைமுக எதிர்ப்புகள் ஏற்படக்கூடும். வீண் வாக்குவாதம் தவிர்த்திடுங்கள். மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் முடித்து விடுவீர்கள்.
எடுக்கின்ற முயற்சிக்கு ஏற்ற நற்பலன்கள் உண்டாகும். அவரவர்களின் வயதிற்கு தகுந்தப்படி நல்ல விஷயங்கள் நடைபெறும். பணவரவு சீராக இருந்தாலும், செலவுகள் அதிகரிக்கும். பகைவர்களின் சதியை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு குரு பகவான் நான்காம் வீட்டில் இருப்பதால் வீண் பகை, விரோதம் ஏற்படுத்துவார். உடல் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.
இல்லத்தில் இருப்பவர்களுடன் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். உங்கள் இல்லத்தில் இருப்பவர்கள் நீங்கள் சொல்ல வந்த கருத்துகளை தவறாக புரிந்து கொண்டு கருத்து வேற்றுமை உருவாகலாம். ஆகஸ்ட் 28-ம் தேதி வரை புதன் பகவானால் சில பிரச்சனைகள் குறுக்கிடலாம். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
பணியிடத்தில் வேலைப்பளு அதிகரித்தாலும், உங்கள் திறமைக்கேற்ற நற்பெயர் கிடைக்கும். அலுவலகத்தில் பாராட்டு பெறுவீர்கள். அலுவலகத்தில் சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரம், தொழில் செய்கிறவர்களுக்கு எதிர்பார்த்ததை விட இருமடங்கு லாபம் வரக்கூடும். செப்டம்பர் 1-ம் தேதிக்குப் பிறகு எல்லா வகையிலும் அதிர்ஷ்டம் கைக் கொடுக்கும். சரியான வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடும். ஒரு சிலருக்கு வீடு மாற்றம், புதிய வாகனம், மனை, விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் அமையும்.
சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆவணி மாதம் திறமை பளிச்சிடும் மாதமாக இருக்கும். மாத தொடக்கத்தில் சூரியன் பன்னிரண்டாம் வீட்டில் இருப்பதால் வேலை சுமை அதிகரிக்கும். மாதம் பிற்பகுதியில் சூரியன் ஆட்சி பலம் பெற்று உங்கள் ராசிக்கு வரும்போது திறமை பளிச்சிடும். இந்த ஆவணி மாதத்தில், சுக்கிரன், சந்திரன், செவ்வாய், கேது சாதகமாக இருப்பதால் நற்பலன்களைக் கொடுப்பர்.
இதுவரை உங்களுக்கு பல வித இன்னல்களை கொடுத்தவர்கள் மனம் மாறி நட்பு பாராட்டுவார்கள். சகோதரர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடு மறையும். சகோதர, சகோதிரியிடம் ஆதரவு கிட்டும். மனதில் புதிய உற்சாகம் உண்டாகும். பல முறை முயற்சி செய்தும் எவ்வித பலன்களும் கிடைக்க வில்லையே என்று கவலை கொண்டு இருப்பவர்களுக்கு மாற்றங்கள் நிகழும்.
உங்கள் ராசிக்கு குரு பகவான் மூன்றாம் இடத்தில் சாதகமற்ற நிலையில் இருந்தாலும், அவரது விசேஷ பார்வையால் இல்லத்தில் சுப நிகழ்ச்சி நடைபெறும். சுக்கிரனால் ஆடம்பர வசதி பெருகும். குடும்ப தேவைகள் பூர்த்தி செய்வீர்கள். ஆகஸ்ட் 31-ம் தேதிக்குப் பிறகு இல்லத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை நிலவும். பணவரவு அதிகரிக்கும். சமூகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
திடீர் பயணங்கள் ஏற்படக்கூடும். ஒரு சிலருக்கு வேலை சம்மந்தமாக வெளியூர் பயணம் செய்ய வேண்டிய சூழல் உருவாகும். புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் அதிகமாக உழைக்க வேண்டி வரக்கூடும்.
ஆகஸ்ட் 28-ம் தேதிக்குப் பிறகு மாற்றங்கள் நிகழும். உங்களுக்கு வருகின்ற பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் நேரத்திற்கு முடித்து விடுங்கள். வியாபாரம், தொழில், சுய தொழில் செய்கின்றவர்களுக்கு முனேற்றத்திற்கான அடிப்படை ஆரம்பங்கள் இப்பொழுது நடைபெறும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த ஆவணி மாதம் பொருளாதார வளம் பெருகும் மாதமாக இருக்கும். இந்த ஆவணி மாதத்தில் குரு, ராகு, சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பொருளாதாரம் வளம் சிறக்கும்.
உங்கள் ராசிநாதன் புதன் ஆகஸ்ட் 28ம் தேதி வரை சாதகமற்ற நிலையில் இருந்தாலும், குரு பகவான் இரண்டாம் இடத்தில் இருப்பதால் நற்பலன்களைக் கொடுப்பார். வசதி பெருகும். சூரியனால் பணம் விரயம் ஏற்படலாம் என்பதால் சுப விரயமாக மாற்றி கொள்ளுங்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு சிலருக்கு வீடு, மனை, புதிய வாகனம், மின்சாதன பொருட்களை வாங்க யோகம் அமையும்.
உங்கள் ராசிக்கு குரு பகவான் இரண்டாம் இடத்தில் இருப்பதால் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். மனதில் தெளிவு பிறக்கும். இல்லத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். பிள்ளைகளின் வழியில் நல்ல நிகழ்ச்சிகள் அல்லது சம்பவங்கள் நடைபெறும். எதிர்பாராத வகையில் தனலாபம் உண்டாகும். தேவையற்ற விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நன்மை தரும். வீண் பழி, எதிரிகளின் கை ஓங்கும் நிலை ஏற்படும் என்பதால் பொறுமையுடன் செயல்படுங்கள். உடல்நலக்குறைவு ஏற்படக்கூடும்.
மார்க்கெட்டிங் துறை, ஆசிரியர், எழுத்தாளர், வழக்கறிஞர்கள், பேச்சை நம்பி தொழில் புரிகின்றவர்களுக்கு இந்த ஆவணி மாதம் ஏற்றமான மாதமாக இருக்கப் போகின்றது. புதிய முதலீடு செய்வதற்கு ஏற்றமான காலமாக இருக்கும். ஒரு சிலருக்கு வெளிநாட்டு பயணம் அமையும். உங்கள் தொழிலை விரிவாக்கம் செய்து புதிய கிளைகளை திறப்பீர்கள்.
வியாபாரம், தொழில் செய்கின்றவர்களுக்கு இரட்டிப்பு லாபம் வரக்கூடும். அரசு சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத உயர்வு கிடைக்கும். ஆகஸ்ட் 20-ம் தேதிக்குப் பிறகு உங்கள் கோரிக்கைகளை முன்வைத்தால் விரைவில் நடைபெறக்கூடும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆவணி மாதம் வளர்ச்சியான மாதமாக இருக்கும். துலாம் ராசியினருக்கு, இந்த ஆவணி மாதம் முழுவதும் சூரியன், புதன், சனி நற்பலன்களை கொடுப்பர்.
ஆகஸ்ட் 31-ம் தேதி வரை சுக்கிரன் சாதகமற்ற நிலையில் இருந்தாலும், அதன் பிறகு உங்கள் ராசியில் வருவதால் சிறப்பான பலன்களை காணலாம். பேச்சில் கவர்ச்சி உண்டாகும். இளமை, அழகு கூடும். உங்கள் செல்வாக்கு உயரும்.
துலாம் ராசியினருக்கு தடைகள் விலகி, இனிமேல் கஷ்டங்கள் எதுவும் நடைபெறாது என்றே கூறலாம். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு மாற்றங்கள் நிகழும். சூரியன் சாதகமாக இருப்பதால் தந்தை வழியால் ஆதாயம் உண்டாகும். தந்தை வழி தொழில் புரிகின்றவர்களுக்கு லாபம் வரக்கூடும். ஜென்மத்தில் இருக்கும் குரு சாதகமற்ற பலன்களை கொடுத்தாலும் அவரது விசேஷ பார்வையால் இல்லத்தில் சுப பேச்சுவார்த்தைகள் நடைபெறும்.
இல்லத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். சகோதர, சகோதரி ஆதரவாக இருப்பார்கள். ஆகஸ்ட் 31-ம் தேதி சுக்கிரனால் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். நண்பர்கள், உறவினர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆகஸ்ட் 28-ம் தேதிக்குப் பிறகு பொருளாதாரம் வளம் மேம்படும்.
பணியிடத்தில் முன்னேற்றம் தொடர்ந்து கிடைக்கும். வேலைப்பளு குறையும். ஆகஸ்ட் 28-ம் தேதிக்குப் பிறகு வேலை, தொழில், வியாபாரம் சம்மந்தமாக வளர்ச்சி அடைவீர்கள். உங்களுக்கு வருகின்ற வாய்ப்புகளை தட்டிக் கழிக்காமல் சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். கொடுக்கின்ற பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். உங்கள் மேற்பார்வையில் அந்த காரியங்களை விரைவில் முடித்து விடுங்கள். அரசு சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் திடீர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரக்கூடும்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆவணி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாக இருக்கும். மாத தொடக்கத்தில் பேச்சில் கவனம் தேவை. உங்கள் ராசிக்கு சூரியன், கேது, செவ்வாய் நற்பலன்களை கொடுப்பர். சுக்கிரன் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை சாதகமாக இருப்பதால் எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி கிட்டும். உற்றார், உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு கூடும்.
ஆகஸ்ட் 28-ம் தேதி வரை புதன் சாதகமற்ற பலன்களை தருவதால் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டும். இல்லத்தில் இருப்பவர்கள் உங்களை சரியாக புரிந்து கொள்ளாமல் வீண் விரோதம், பகை ஏற்படுத்தி கொள்வார்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் ஏற்படும் பிரச்சனைகளை பேசி தீர்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் ராசிக்கு பன்னிரண்டாம் இடத்தில் இருக்கும் குருவால் செலவுகள் அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
சொந்த பந்த வருகையால் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். ஒரு சிலருக்கு புதிய வீடு, மனை, வாகனம், விலையுர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் அமையும். செலவுகள் ஒரு பக்கம் இருந்தாலும், எதிர்பாராத வகையில் பணவரவு இருந்து கொண்டே இருக்கும். தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படக்கூடும்.
மாத முற்பகுதியை விட பிற்பகுதியில் வளர்ச்சியான மாதமாக இருக்கப் போகின்றது. ஆகஸ்ட் 28-ம் தேதிக்கு பிறகு, புதன் சூரியன் இணைந்து ’புத ஆதித்ய யோகம்’ உண்டாவதால் பதவி உயர்வு கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடும். தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை மாறி விறுவிறுப்புடன் நடைபெறும். விருச்சிகம் ராசியினருக்கு அவரவரின் வயதிற்கேற்ப மாற்றங்களும், பதவி உயர்வும் கிடைக்கும். மொத்தத்தில் விருச்சிகம் ராசியினருக்கு தடைகள் விலகி, நல்லவைகள் நடைபெற ஆரம்பிக்கும் மாதமாக இருக்கப் போகின்றது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த ஆவணி மாதம் முயற்சியால் வெற்றி கிடைக்கும் மாதமாக இருக்கும். இந்த ஆவணி மாதத்தில் தனுசு ராசியினருக்கு கிரகங்கள் சுமாரான பலன்களை கொடுக்கும். ஜென்ம ராசியில் சனி பகவான் இருப்பதால் நினைத்த காரியம் உரிய நேரத்திற்கு முடிவடையாமல் இழுபறியாக செல்லும்.
ஆகஸ்ட் 28-ம் தேதி வரை புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் எடுக்கின்ற முயற்சியால் வெற்றி கிடைக்கும். ஆகஸ்ட் 31-ம் தேதி வரை சுக்கிரன் சாதகமான வீடுகளில் இருப்பதால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது.
பதினோராம் இடத்தில் இருக்கும் குரு சாதகமான பலன்களை கொடுப்பார். சொந்த பந்த வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். ஆகஸ்ட் 28-ம் தேதிக்குப் பிறகு புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் பொறுமையுடன் செயல்பட வேண்டிய காலமாக இருக்கப் போகின்றது. வீண் விவாதங்களை தவிர்த்திடுங்கள். எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் ஒரு முறைக்கு பல முறை முயற்சி செய்த பிறகே அமையக்கூடும்.
குறிப்பாக மூலம் நட்சத்திரம், பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு எதிர்காலத்தை பற்றி பயம், மனக்கவலை இருந்து கொண்டே இருக்கும். சனி இப்பொழுது மூலம் நட்சத்திரம் செல்வதால் செய்கின்ற பணிகளில் சற்று தடுமாற்றம் உருவாகலாம். பிரச்சனைகள் ஒரு பக்கம் இருந்தாலும், பணவரவு சீராக வரக்கூடும்.
பணியிடத்தில் உங்களுக்கு எரிச்சலூட்டும் வகையில் சம்பவங்கள் நடைபெறும் என்பதால் நிதானமாக செயல்படுங்கள். யாரையும் முழுவதுமாக நம்பி செயலில் இறங்க வேண்டாம். மாத பிற்பகுதியில் உங்கள் திறமை பளிச்சிடும். ஒரு சிலருக்கு திடீர் இடமாற்றம், வெளியூர் பயணம் ஏற்படும்.
மகரம்
மகரம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆவணி மாதம் துணிச்சலாக செயல்பட கூடிய மாதமாக இருக்கும். மகரம் ராசியினர்கள் மாத தொடக்கத்தை விட மாதப் பிற்பகுதியில் நற்பலன்களை அடைவார்கள். ஆகஸ்ட் 28-ம் தேதிக்குப் பிறகு புதன் சாதகமாக இருப்பதால் எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றியை கொடுப்பார். உங்கள் திறமை பளிச்சிடும். இதுவரை இருந்து வந்த குழப்பான சூழ்நிலை மாறும்.
குரு பகவான் பத்தாம் இடத்தில் இருந்து கொண்டு சுமாரான பலன்களை கொடுப்பார். அவரது ஐந்தாம் பார்வை விசேஷமாக இருப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் பிறக்கும். இதுவரை இருந்த வந்த மந்த நிலை மாறும். புதிய உற்சாகம், மன தைரியம் கூடும். அரசு சார்ந்த துறையில் இருப்பவர்கள், தனியார் துறையில் பணிபுரிவர்கள் நன்மைகள் பெறுவர். வியாபாரம், தொழில், வேலை போன்ற அனைத்தும் லாபகரமாக அமையக்கூடும்.
ஒரு சிலருக்கு எதிர்பாராத வகையில் மாற்றங்கள் நிகழும். வேலை சம்மந்தமாக வெளிமாநிலம், வெளிநாடு செல்ல வேண்டிய சூழல் உருவாகும். வியாபாரத்தில் போட்டியாளர்கள் அதிகரிப்பதால் சற்று கடுமையாக உழைக்க வேண்டி வரக்கூடும்.
மாற்று யோசனைகள், புதிய யுக்திகளை பயன்படுத்தி லாபத்தை பெருக்குவீர்கள். அலுவலகத்தில் வேலைப்பளு குறையும். இதுவரை நீங்கள் உழைத்த உழைப்புக்கு வீண் போகாமல் உங்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். அலுவலகத்தில் பாராட்டு பெறுவீர்கள்.
சுக்கிரனால் குடும்பத்தில் சந்தோஷமான சூழல் உண்டாகும். உறவினர்கள் வருகையால் இனிய சூழல் உருவாகும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். இதுவரை இல்லத்தில் ஏற்பட்ட எண்ணற்ற பிரச்சனைகளும், குழப்பங்களும் ஆகஸ்ட் 28-தேதிக்குப் பிறகு மறையும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை நிலவும்.
கும்பம்
கும்பம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆவணி மாதம் அதிர்ஷ்டம் கைக் கொடுக்கும் மாதமாக இருக்கும். கும்ப ராசியினருக்கு கோட்சார கிரக நிலைகள் நன்றாக அமைந்து இருப்பதால் தொட்டது துலங்கும் மாதமாக இருக்கப் போகின்றது.
உங்கள் திறமை பளிச்சிடும். சமூதாயத்தில் உங்கள் அந்தஸ்து, செல்வாக்கு உயரும். நீண்ட நாட்களாக நடைபெறாத விஷயங்கள் இப்பொழுது நடைபெறும். பல வித சோதனைகளை சந்தித்தாலும் இறைவன் ஒருபோதும் உங்களை கைவிடமாட்டார் என்பதை அறிந்து கொள்வீர்கள்.
பிறந்த ஜாதகத்தின் படி இப்பொழுது நல்ல தசை நடைபெற்று கொண்டு இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி என்றே கூறலாம். பிறந்த ஜாதகத்தில் தசை நன்றாக இல்லாவிட்டாலும், இந்த கோட்சார கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால் நற்பலன்களை கொடுக்கும்.
குரு, ராகு, சுக்கிரன், புதன், சனி பகவான் நற்பலன்களை கொடுக்கப் போகின்றார்கள். தெளிவான முடிவெடுப்பீர்கள். பொருளாதார வளம் மேம்படும். ஆடம்பர வசதிகள் பெருகும். கல்யாண பேச்சுவார்த்தை நல்லபடியாக முடிவடையும். குரு பகவான் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் இருந்து கொண்டு ஐந்தாம் பார்வையாக உங்கள் ராசியைப் பார்ப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் பிறக்கும்.
கணவன் மனைவி இடையே அந்யோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் குதூகலம் உண்டாகும். தனியார் துறையில் புரிகின்றவர்களுக்கு ஏற்றமான காலமாக இருக்கும். அலுவலத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உங்களுக்கு கொடுக்கின்ற பொறுப்புகளையும், வருகின்ற வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள். வேலையின்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்கலாம். வியாபாரம், தொழில் சீராக நடைபெறும். செப்டம்பர் 1-ம் தேதிக்குப் பிறகு எதிர்பாராத வகையில் தனலாபம் உண்டாகும்.
மீனம்
மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆவணி மாதம் பணவரவு அதிகரிக்கும் மாதமாக இருக்கும். உங்கள் ராசிக்கு செவ்வாய், கேது, புதன், சூரியன் சாதகமான பலன்களை தர காத்திருக்கின்றனர்.
சுக்கிரன் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குப் பிறகு நற்பலன்களைக் கொடுப்பார். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஒரு சிலருக்கு புதிய பொறுப்புகள் வரக்கூடும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். சிலர் ஆன்மீக சுற்றுலா சென்று வருவீர்கள்.
பணிபுரியம் இடத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். சூரியன் சாதகமாக இருப்பதால் அரசு சார்ந்த பணியில் இருப்பவர்களுக்கு ஏற்றமான காலமாக அமையும். சிலருக்கு புதிய பதவி தேடி வரக்கூடும். வியாபாரம் சூடு பிடிக்கும். தொழில் அதிபர்களுக்கு அரசு சார்ந்த சிக்கல்கள் தீரும். வேலை, தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த இடைஞ்சல்கள் நீங்கும். பொருளாதார வளம் மேம்படும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். ஆகஸ்ட் 20, 21, 22, 23, செப்டம்பர் 8,9,10 ஆகிய தேதிகளில் எதிர்பாராத வகையில் நன்மை உண்டாகும்.
உங்கள் ராசிநாதன் குரு எட்டாம் இடத்தில் இருப்பதால் சாதகமற்ற பலன்களைக் கொடுப்பார். அவ்வப்பொழுது வீண் சந்தேகம், மன குழப்பம் வரக்கூடும். யாரையும் பற்றி புறம் பேசாதீர்கள். குருவின் பார்வை சிறப்பாக இருப்பதால் உங்களுக்கு வருகின்ற இடையூர்களை முறியடித்து வெற்றி அடைவீர்கள். இல்லத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.
திருமணப் பேச்சுவார்த்தையில் ஆகஸ்ட் 28-தேதிக்குப் பிறகு நல்ல முடிவு வரக்கூடும். மீனம் ராசி பெண்களுக்கு சிறப்பான மாதமாக இருக்கப் போகின்றது. சகோதர, சகோதரிகள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். மாத தொடக்கத்தில் சிறிது தடை இருப்பதாக தோன்றினாலும், மாத இறுதியில் உங்களுக்கு சாதகமாக வெற்றியாகவே முடிவடையும்.